states

img

தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ மோடி அரசின் உத்தரவிற்கு நாகா மாணவர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ மோடி அரசின் உத்தரவிற்கு நாகா மாணவர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

கோஹிமா மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், அரசியல் ஆதாயத்திற்காகவும் மோடி அரசின் உள்துறை அமைச்சகம் ஜனவரி 28 அன்று ஒரு அறி விப்பை வெளியிட்டது. அதில், “தேசிய கீதத்திற்கு (ஜன கண மன)  முன்னால் தேசிய பாடல் (வந்தே  மாதரம் - வங்காள கவிஞர் பங்கிம்  சந்திர சட்டர்ஜி எழுதினார்) முத லில் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். அரசு விழாக்கள் மற்றும்  கல்வி நிறுவனங்களில் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், வந்தே மாதரம்  தொடர்பான மோடி அரசின் உத்த ரவுக்கு, வடகிழக்கு மாநில மாண வர் அமைப்பான நாகா மாணவர்  கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக நாகா மாணவர் கூட்டமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில், “நாகா லாந்து பள்ளி கல்வி வாரியம் தனது  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வந்தே மாதரம் தொடர்பான நடை முறைகளை அமல்படுத்தும் எந்த வொரு சுற்றறிக்கையையோ, அறி விப்பையோ அல்லது அறிவுறுத்த லையோ வெளியிட வேண்டாம்.  பள்ளிகளுக்குக் கட்டாயமாக்கப் பட்டுள்ள இந்த உத்தரவு, நாகா  மக்களின் வரலாற்று, அரசியல்  மற்றும் கலாச்சார யதார்த்தங்க ளைக் கணக்கில் கொள்ளாத ஒரு  திணிப்பாகும். இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ(ஏ)  உள்ளிட்ட கட்டமைப்புகளை நாங்கள் அறிந்திருந்தாலும், நாகா லாந்தின் தனித்துவமான வரலாறு மற்றும் அடையாளத்தைப் புறக்க ணிக்கும் வகையில் எந்தவொரு அதிகாரமும் கலாச்சார அல்லது கருத்தியல் இணக்கத்தை எங்கள் மீது திணிக்க முடியாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரி வித்துக் கொள்கிறோம்” என அதில்  கூறப்பட்டுள்ளது.