states

img

மன்மோகன் சிங் - இன்றைய அரசியலின் நிலைக்கண்ணாடி! - அ. அன்வர் உசேன்

சமீப கால இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்த மன்மோகன் சிங் அவர்கள் தனது 92வது வயதில் காலமானார். இந்தியாவிலும் வெளியிலும் அவர் வகித்த பொறுப்புகள் ஏராளம். 

இரு வேறு பாதைகள்

தேசப்பிரிவினை எனும் கொடூர பின்னணி யில் இன்றைய பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்த அத்வானி இந்துத்துவா திசையில் பயணித்தார். ஆனால் அதே கொடூர பின்ன ணியில் இந்தியா வந்த மன்மோகன் சிங் மதச்சார்பின்மை திசையில் கால் பதித்தார்.  அவரின் ஜனநாயக மாண்புகள் மெச்சத் தகுந்தவை என்பதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது. எனினும் அவரால் அமல் படுத்தப்பட்ட நாசகர தாராளமய கொள்கைகள் இந்துத்துவாவின் வளர்ச்சிக்கு மறைமுக காரணியாக அமைந்தன என்பதும் உண்மை.

பிரமிக்கத்தக்க  வாழ்க்கைப் பயணம்

பல குடும்பங்கள் சந்தித்த துன்பங்களை மன்மோகன் சிங் அவர்களும் சந்தித்தார். மிகவும் சாதாரண குடும்ப சூழலில் பல மைல் தினமும் பய ணித்து பள்ளிப் படிப்பை முடித்தார்.  கல்லூரி யிலும் பின்னர் பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழ கத்திலும் பயின்ற பொழுது சிறந்த மதிப்பெண் அடிப்படையில் கிடைத்த உதவித்தொகை மூலமாகவே முனைவர் பட்டம் முடித்தார்.  தொழில் வாழ்க்கை பிரிட்டனில் அதிக ஊதியம் கொண்ட வேலைகள் அவரை தேடி வந்தாலும் தனது  வாக்குறுதியைக் காப்பாற்ற பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி தொடங்கினார். அயல்நாடு வர்த்தக அமைச்சகத்தில் ஆலோ சகர்/ நிதி அமைச்சக ஆலோசகர்/ திட்டக்குழு செய லாளர்/திட்ட குழு துணை தலைவர்/ பிரதமரின் பொருளாதார ஆலோசகர்/ பல்கலைக்கழக மானிய குழு தலைவர்/ ரிசர்வ் வங்கியின் கவர்னர் என அவர் வகித்த பதவிகள் ஏராளம். ஜனநாயக மாண்புகள் பிரதமர் உட்பட எந்த பதவியில் இருந்தாலும் அடக்கம்/ பணிவு/ மாற்று கருத்துகளை மதிக்கும் மாண்பு ஆகியவற்றை மன்மோகன் சிங் கொண்டிருந்தார்.  2005ம் ஆண்டு பிரதமர் என்ற முறையில் உரையாற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வந்த பொழுது அவரது பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து மாணவர்கள் கருப்பு கொடி காட்டினர். அப்பொழுது அவர் உரை தொடங்கிய பொழுது “உங்களின் கருத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் உங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை காக்க நான் சாகும்வரை தயங்க மாட்டேன்” எனக்கூறினார்.  அடுத்த நாள் கருப்பு கொடி காட்டியவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முனைந்த பொழுது பிரதமர் அலுவலகம் தலையிட்டு மாணவர்களின் கருத்துரிமைக்காக தண்டனை கூடாது என அறிவுறுத்தியது. இந்த ஜனநாயக மாண்பு அவரிடம் இறுதிவரை இருந்தது.

நாசகர பொருளாதார கொள்கைகளின் சிற்பி

1991ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமனம் செய்தார். 1987-1990ம் ஆண்டுவரை வளரும் நாடுகளின் குரலாக “தெற்குலக நாடுகளின் ஆணையத்தின்” தலைவராக இருந்த மன்மோகன் சிங் ஏகாதி பத்திய நாடுகளின் மோசமான அணுகுமுறையை எதிர்த்தார். ஜூலியஸ் நைரேரே/ பிடல் காஸ்ட்ரோ ஆகியோருடன் விவாதித்தார்.  கொள்கை மாற்றம் ஆனால் 1991ல் நிதி அமைச்சரான பின்னர் அவரது கொள்கைகள் தலைகீழாக மாறின. இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை மீட்பது எனும் பெயரில் உலக வங்கி/ சர்வதேச நிதி ஆணையத்தின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  அப்பொழுது ஆர்.கே.லட்சுமணன் அவர்களின் கார்ட்டூன் மிகச்சிறப்பாக இந்த சரணடைவை வெளிப்படுத்தியது. பன்னாட்டு நிதி நிறுவனம் (IMF) அலுவலகத்திலிருந்து நிதி உதவியுடன் வெளிவரும் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் கைகள் முறுக்கப்பட்டிருக்கும். நரசிம்மராவ் மன்மோகனிடம் சொல்வார்: “யாராவது கேட்டால் IMF அல்ல; நாமேதான் நம் கைகளை முறுக்கிக் கொண்டோம் என சொல்லிக்கொள்ளலாம்”

புதிய பொருளாதார கொள்கைகள்

நாசகர நவீன தாராளமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. தனியார்மயம் முக்கிய இடத்தை பெற்றது. மக்கள் நல அரசு எனும் கோட்பாடு சிதைக்கப்பட்டது. தனியார் கார்ப்ப ரேட்டுகள் பெரும் சலுகைகள் பெற்றனர்.  தேர்தல் தோல்விகள் எனினும் இந்த கொள்கைகள் மக்களின் ஆதரவை பெறவில்லை. 1994ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரா சட்டமன்ற தேர்தல்களில் நரசிம்மராவ் இந்த கொள்கைகளை முன்வைத்து தான் பிரச்சாரம் செய்தார். 294 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 34 தொகுதிகளில்தான் வென்றது. இதனைத் தொடர்ந்து 1996 நாடாளு மன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் தோற்றது. கொள்கைகளுக்கான நியாயப்படுத்தல்கள் மன்மோகன் சிங்கின் கொள்கைகளை நியாயப்படுத்துபவர்கள் சோவியத் யூனியனில் சோசலிசம் பின்னடைவை சந்தித்த பின்னணி யில் இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது எனவும் இதனை அங்கீகரித்த முதல் அரசியல் தலைவர் மன்மோகன் சிங்தான் எனவும் வாதிடுகின்றனர்.  இதே சூழ்நிலையில்தான் இந்தியாவைவிட அதிக தடைகளை சந்தித்த கியூபா இந்த கொள்கைகளை நிராகரித்தது. வியட்னாம்/ சீனா/ வெனிசூலா போன்ற பல நாடுகள் மேற்குலக நாடுகளின் பொருளாதார கொள்கைகளை நிராகரித்தன. எனவே மன்மோகன் சிங் அவர்களின் தலைகீழ் மாற்றத்தை சோசலிச பின்னடைவை கூறி நியாயப்படுத்த இயலாது.

பிரதமர் காலம் - முதல் ஆட்சி

மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த காலத்தைவிட பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக 2009-14 காலத்தில் நாசகர பொருளாதார கொள்கைகள் பெருமளவில் அமல்படுத்தப்பட்டன.  இடதுசாரி களின் ஆதரவுடன் செயல்பட்ட மன்மோகன் சிங் முதல் ஆட்சிக் காலத்தில் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் தகவல் உரிமை சட்டம்/ பழங்குடி இன மக்களின் வன உரிமை போன்ற பல சட்டங்கள் இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக நிறைவேற்றப்பட்டன.  தனியார்மய முயற்சிகள் எனினும் காங்கிரஸ் கட்சி தனியார்மயத்தை முன்னெடுக்க முயன்றது. இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி தேசிய அனல் மின் கழக பங்குகள் விற்கப்பட்டன. பின்னர் பாரத மிகு மின் நிலையத்தின்(பெல்) 10%பங்குகள் விற்க முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுது ஒருங்கிணைப்புக் குழுவி லிருந்து இடதுசாரிகள் வெளியேறினர். வேறு வழி யின்றி பெல் பங்கு விற்பனை கைவிடப்பட்டது.  அணு ஒப்பந்தம் அணு ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நிலையை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டதால் இடதுசாரிகள் ஆதரவை திரும்ப பெற்றனர். இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் அமைந்த இரண்டாவது மன்மோகன் சிங் ஆட்சி தாராளமய கொள்கை களில் பெரும் வேகத்தில் பயணித்தது. 

இரண்டாம் ஆட்சியின் விளைவுகள்

• முதல் மன்மோகன் அரசாங்கம் ரூ 7,500 கோடி பொதுத்துறை பங்குகளை விற்றது எனில் இரண்டாவது அரசாங்கம் ரூ. 99,000 கோடிக்கு பங்குகளை விற்றது. • கார்ப்பரேட்டுகளுக்கு ரூ 2,28,000 கோடி சலுகைகள் மற்றும் வங்கி கடன்கள் வாரி இறைப்பு.  • சில்லரை விற்பனையில் 51% மருந்து உற்பத்தியில் 100% என அந்நிய முதலீடு.  • குடி நீர் வழங்கலில் தனியார் அனுமதி.  • உணவு பணவீக்கம் 10%ஐ தாண்டியது. •    விவசாய உற்பத்தியிலிருந்து அரசு பின்வாங்கல். • விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு. • வனங்களில் வாழும் பழங்குடி இன மக்களின் நிலம் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டதால் 17 மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. • பொருளாதார வளர்ச்சி சரிவு. • பல ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னுக்கு வந்தன. மக்களிடையே அதிருப்தி தலைதூக்கியது. இதனை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மிக சாதுர்யமாகவும் சூழ்ச்சியுடனும் பயன்படுத்திக் கொண்டதும் பின்னர் மோடி அரசாங்கம் அமைந்ததும் வரலாறு.

இரட்டை அபாயங்கள் 

பாஜகவின் ஆட்சிக்கு வழிவகுத்தது மதவாதம் மட்டுமல்ல; மன்மோகன் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் உருவாக்கிய அதிருப்தியும் இன்னொரு காரணம் ஆகும். எனவேதான் - மதவெறி, நவீன தாராளமயம் - இந்த இரட்டை அபாயங்களையும் ஒரு சேர எதிர்க்க வேண்டும் என இடதுசாரிகள் கோருகின்றனர்.  துரதிர்ஷ்டவசமாக ஏனைய கட்சிகள் இதனை அங்கீகரிக்க மறுக்கின்றன. இந்த இரட்டை அபாயத்தின் ஒரு பகுதியை அங்கீகரிக்க மறுக்கும் அரசியலின் நிலைக்கண்ணாடியாகவே மன்மோகன் சிங் இருந்தார் எனில் மிகை