states

img

சிபிஎம் பீகார் மாநில மாநாடு - எழுச்சிப் பொதுக்கூட்டம் செயலாளராக லாலன் சவுத்ரி தேர்வு

பாட்னா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது பீகார் மாநில மாநாடு தர்பங்காவில் நடைபெற்றது. மறைந்த பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நகரில் (தர் பங்கா நகர மைதானம்) பீகார் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஷியாம் பாரதி தலைமையில் நடை பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்து டன் மாநாடு துவங்கியது. ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் ஏ. விஜயராகவன், டாக்டர் அசோக் தாவ்லே, மத்தியக் குழு உறுப்பி னர்கள் அம்ரா ராம் எம்.பி., ஏ.ஆர்.சிந்து, அவதேஷ் குமார், லாலன் சவுத்ரி, மாநில செயலாளர் அஜய் குமார் எம்எல்ஏ, மாவட்ட செயலா ளர் அவினாஷ் தாக்கூர் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து பீகார் முன்னாள் மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான விஜய காந்த் தாக்கூர்  நகரில் நடைபெற்ற பிரதிநிதிகளின் அமர்வை ஏ.விஜய ராகவன் தொடங்கி வைத்தார். துவக்க உரையில் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் அச்சுறுத்தலை வலு வாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் விளக்கினார். 37 மாவட்டங்களில் இருந்து 345  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். லாலன் சவுத்ரி அறிக்கை சமர்ப்பித் தார். அசோக் தாவ்லே, அம்ரா ராம் மற்றும் ஏ.ஆர்.சிந்து ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். தீர்மானம் நிறைவேற்றம், விவாத நிகழ்வுகளுக்குப் பின் 50 பேர்  கொண்ட மாநிலக் குழு தேர்வு செய் யப்பட்டு, மாநிலச் செயலாளராக லாலன் சவுத்ரி தேர்வு செய்யப் பட்டார். தமிழ்நாட்டின் மதுரையில் (ஏப்ரல் 2 முதல் 6 வரை)  நடை பெற உள்ள அகில இந்திய மாநாட் டுக்காக 18 பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். போராட்டங்கள், மாற்றத்துக் கான நடவடிக்கை மூலம் கட்சியை வலுப்படுத்துவது என்ற தீர்மானத் துடன் மாநாடு நிறைவு பெற்றது. இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையை வலுப் படுத்தவும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.