கேரளத்தில் சர்வதேச நாடக விழா திருச்சூரில் வண்ணமயமான தொடக்கவிழா
15ஆவது சர்வதேச நாடக விழா (ITFOC) திருச்சூரில் உள்ள கேரள சங்கீத நாடக அகாடமி வளா கத்தின் திறந்தவெளி மேடையில் பலூன்க ளை பறக்கவிட்டு வண்ணமயமாக துவக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பிந்து, லலிதகலா அகாடமியின் தலைவர் முரளி சீரோத், சாகித்ய அகாடமியின் செயலாளர் சி.பி.அபுபக்கர், சங்கீத நாடக அகாடமியின் தலைவர் மட்டனூர் சங்கரன்குட்டி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.பிரின்ஸ், அமைச்சர் கே.ராஜன், தலை மை விருந்தினர் தென்னிந்திய திரைக் கலைஞர் நாசர், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டியன், சங்கீத நாடக அகா டமியின் செயலாளர் கரிவல்லூர் முரளி, துணைத் தலைவர் பி.ஆர்.புஷ்பவள்ளி ஆகியோர் கேரள சங்கீத நாடக அகாடமி வளாகத்தின் திறந்தவெளி மேடையில் பலூன்களை பறக்கவிட்டனர். சங்கீத நாடக அகாடமி தலைவர் மட்டனூர் சங்கரன்குட்டி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.