“முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் இந்துக்களுக்கு வேலையாம்”
வாக்குத் திருட்டு தொடர் பான தகவல் வெளியான பின்பு பாஜகவினர் தொடர்ந்து வெறுப்பு பேச்சைக் கக்கி வருகின்றனர். இதில் பாஜக ஆளும் மாநி லங்களில் வெறுப்புப் பேச்சு வன்முறை யைத் தூண்டும் வகையில் மிக மோச மாக உள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத்தின் டோமரியா கஞ்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பாஜ கவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், “முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய் வோம்” என்று கட்டாய மதமாற்றத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் முஸ்லிம் பெண்களை கடத்து மாறு தவறான வழிகாட்டுதல்களையும் அவர் கூறியுள்ளார். பிரதாப் சிங்கின் பேச்சுக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
