states

img

பழங்குடியின கிறிஸ்தவ பெண்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

புவனேஸ்வரம் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒடிசாவில் முன்னெப்போ தும் இல்லாத வகையில் வன்முறை சம்பவங்கள் மிக மோச மான அளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்று  மத வன்முறை நிகழாத மாநிலமாக இருந்த ஒடிசா, தற்போது உத்தரப்பிர தேசம், குஜராத், மணிப்பூர் மாநிலங்க ளைப் போல மத வன்முறை பூமியாக மாறி வருகிறது. இந்நிலையில், ஒடிசாவின் பால சோர் மாவட்டத்தில் உள்ள ரெமுனா பகுதியில் உள்ளது சங்கன்பூர் கிராமம். இந்த கிராமத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்தநாள் (டிச., 26) இரண்டு கிறிஸ்தவ பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டிவைத்து, இந்து மதத்தைச் சேர்ந்தவரை எப்படி மதமாற்றம் செய்யலாம் எனக் கூறியும், “பாரத் மாதா கி ஜெய்” மற்றும் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷங்களை எழுப்பி யும் இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியது. மேலும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த கேக்கை பழங்குடியினப் பெண்கள் மீது பூசி அடாவடி செயலில் ஈடுபட்டது இந்துத்துவா கும்பல். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாக்கப்பட்ட இரண்டு பெண்களும் சுமார் 40 வயது உடையவர்கள் ஆவர். சுபாசினி சிங் மற்றும் சுகந்தி சிங் பெயருடைய இருவரும் சங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. தகவலறிந்த ரெமுனா பகுதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபாஸ் மல்லிக் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டுமே கூறினார். ஆனால் குற்றவாளிகள் கைது நடவடிக்கை தொடர்பாக அவர் எவ்வித தகவலும் அளிக்கவில்லை.  நாடக எம்.பி.,யின் தொகுதி பழங்குடியினப் பெண்கள் மீது தாக்குதல் நடந்த இடமான சங்கன்பூர் கிராமம் பாலசோர் மக்களவை தொகு திக்கு உட்பட்டது ஆகும். நாடாளு மன்றத்தில் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித் ஷாவை காப்பாற்ற மருத்துவக்கட்டு நாடகமாடிய  பிரதாப் சாரங்கி தான் பாலசோர் தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சரான பிரதாப் சாரங்கி பாலசோர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஒடிசா முதல்வர் மோகன் மாஜி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வின் சொந்த மாவட்டங்களான கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் உடன் எல்லைகளை சங்கன்பூர் கிராமம் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பி டத்தக்கது.