திருப்பதி கோவில் காணிக்கை சிஐடி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் நாள்தோறும் தங்கம், வெள்ளி, பணம், வெளிநாட்டு கரன்சியை பக்தர்கள் காணிக்கையாக வழங்குகின்ற னர். ஆனால் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சியை திருடியதாக 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் தேவஸ்தானம் புகார் தெரிவித்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு ஆந்திர உயர்நீதிமன்ற கிளை யில் செவ்வாய்க்கிழமை அன்று விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற நீதிபதிகள், “விசாரணை அதிகாரியும் தேவஸ்தான நிர்வாகிகளும் வெளிநாட்டு கரன்சி வழக்கில் பெரிய அளவில் சமரசம் செய் துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அத னால் இந்த வழக்கை சிஐடி (குற்றப் புலனாய்வுத் துறை) விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். விசாரணை அறிக் கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்” என டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.
