நாடு முழுவதும் மாநி லங்களின் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள் மூலம் வசூலிக்கப் பட்ட வரி நிதியில் ரூ.70,744 கோடி பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்திய கட்டுமானத் தொழிலா ளர் கூட்டமைப்பின் தேசிய செய லாளர் அர்கா ராஜ்பண்டிட், கட்டிடம் கட்டும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து மாநில கட்டுமான தொழிலாளர்களின் நலவாரியங்கள் மூலம் வசூ லிக்கப்பட்ட நிதி, செலவினம் மற்றும் இருப்பு தொடர்பாக விப ரத்தை அளிக்கக் கோரி தகவல் அறி யும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் ஒன்றிய தொழிலாளர் அமைச்சகத்திடம் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவிற்கு ஒன்றிய தொழி லாளர் அமைச்சகம் அளித்துள்ள பதிலில், “1996-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, மாநில அரசுகளால் அமைக்கப் பட்ட கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு கட்டிடம் கட்டும் உரிமையாளர்கள் 2%க்கு மிகாமல், அதாவது 1% க்குக் குறையாத விகிதத்தில், ஒரு கட்டிடம் கட்டும் உரிமையாளர்களின் கட்டுமானச் செலவில் வரி விதிக்க அதிகாரம் அளிக்கிறது. அதன்படி செப்டம்பர் 30, 2024 வரை 36 மாநில நல வாரியங்களில் 5.73 கோடி (5,73, 48,723) தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதே போல கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 2005 ஆம் ஆண்டு நடை முறைக்கு வந்ததிலிருந்து, மாநி லங்களின் கட்டுமானத் தொழிலா ளர் நல வாரியங்கள் ரூ.1,17,507.22 கோடி அளவில் வரியை வசூ லித்துள்ளன. ஆனால் தொழிலா ளர்களின் நலனுக்காக நல வாரி யங்கள் ரூ.67,669.92 கோடி மட்டுமே ஒதுக்கி செலவிட்டுள்ளன. ரூ.70,744 கோடி நிதியை இன்னும் பயன்படுத்தாமல் உள்ளன. கொரோனா ஊரடங்கு அறி விக்கப்பட்ட காலத்தில் தங்களது சொந்த கிராமங்களுக்குப் புலம் பெயர்ந்த கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எவ்வித உதவியையும் செய்யவில்லை என கடந்த 2020 மார்ச் மாதம் புகார்கள் வந்துள் ளன” என அதில் கூறப்பட்டுள்ளது
வரி ஏய்ப்பு
ஒன்றிய தொழிலாளர் அமைச்ச கம் அளித்துள்ள பதில் தொடர்பாக அர்கா ராஜ்பண்டிட் கூறுகை யில், “ஒன்றிய அமைச்சகப் பதில் ஆவணம், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பெரும் வரி ஏய்ப்பைச் சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக மகா ராஷ்டிராவில் கடந்த 19 ஆண்டு களாக வசூலிக்கப்பட்ட மொத்த வரி ரூ.19,489.25 கோடி ஆகும். அதா வது கடந்த 19 ஆண்டுகளில் மாநி லத்தில் ரூ.19 லட்சம் கோடி மதிப்பி லான கட்டுமானங்கள் நடந்துள் ளன. ஆனால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் கட்டுமானம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்த புள்ளிவிவரம் உண்மையிலிருந்து மிகவும் வெகு தொலைவில் உள் ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரும் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுவாக எழுந்துள்ளது.
தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை
அதே போல மாநில நலவாரி யங்கள் மொத்த வசூல் பணத்தில் மிகக் குறைந்த தொகையையே தொழிலாளர் நலனுக்காக செல விட்டுள்ளது. தொழிலாளர் களுக்கு அவர்களின் நிர்ணயிக்கப் பட்ட சலுகைகள் முற்றிலும் மறுக்கப் பட்டுள்ளன. மகாராஷ்டிரா கடந்த 19 ஆண்டுகளில் வசூலித்த வரி மூலம் ரூ.13,683.18 கோடி மட்டுமே செலவிட்டது, அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் உத்தரப்பிர தேசம் ரூ.7,921.42 மற்றும் ரூ. 7,826.66 கோடியை தொழி லாளர்களுக்கு வழங்கியுள்ளன. மகாராஷ்டிராவின் கணக்கு களில் ரூ.9,731.83 கோடி இருப்பு உள்ளது. அதே போல கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் முறையே ரூ.7,547.23 மற்றும் ரூ.6,506.04 இருப்பு உள்ளது. கட்டிடம் மற்றும் இதர கட்டு மானத் தொழிலாளர்கள் சட்டம் தொழிலாளர்களுக்கு இலவச தற்காலிக தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறைகளை வழங்கு வதை கட்டாயமாக்கியது. ஆனால் இந்த சட்டப்பூர்வ உரிமைகளை ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்பு பரிந்துரைக்கக்கூடிய வசதி களுக்கு மாற்றுகின்றன. அந்த தொகுப்பு பரிந்துரைக்காவிட்டால் இந்த வசதிகளை பெற தொழிலா ளர்களுக்கு உரிமை இல்லை.
இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கண்டால் பயம்
கேரளாவைத் தவிர பெரும் பாலான மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சட்டத்தை அமல் படுத்தவில்லை. அதே போல நிர்ண யிக்கப்பட்ட சலுகைகளும் குறைக்கப்படுகின்றன. பல மாநில அரசுகள், இடதுசாரி தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளை ஒதுக்கி வைக்கும் நோக்கில், நல வாரியங்களை மறுசீரமைப்ப தில்லை. மிக முக்கியமாக வாரி யங்களில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடக்கின்றன” என அவர் குற்றம் சாட்டினார். ஓடி ஒளியும் மோடி அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர் பான உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்க ளின்படி கட்டிடம் மற்றும் கட்டு மானத் திட்டங்களின் மொத்த செலவு பற்றிய தகவல்களை அர்கா ராஜ்பண்டிட் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார். ஆனால் ஒன்றிய மோடி அரசோ மொத்த செலவு பற்றிய தகவல் எங்களிடம் இல்லை என்று கூறி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளம் அசத்தல்
நாட்டிலேயே கட்டிடத் தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் மூலம் முறையாக நிதி ஒதுக்கும் முதல் மாநிலம் என்ற பெயரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரள மாநில அரசு பெற்றுள்ளது. கேரளம் வரியாக ரூ.3,558 கோடியை வசூலித்து, அனைத்து தொகையையும் கட்டிடத் தொழிலாளர்களுக்காக செலவிட்டுள்ளது. குறிப்பாக குறைந்த இருப்புத் தொகை கொண்ட மாநிலம் என்ற பெயரையும் கேரளம் (ரூ.15 கோடி) பெற்றுள்ளது. (யூனியன் பிரதேசத்தை சேர்த்தால் லட்சத்தீவு குறைந்த இருப்புத்தொகை கொண்ட மாநிலம் ஆகும் - ரூ.12 கோடி)