உலகில் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் நெருங்கிய உறவினரால் படுகொலை
ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சித் தகவல்
நியூயார்க் உலகளவில் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் நெருங்கிய உறவினரால் படுகொலை செய்யப்படுவதாகவும் நாள் தோறும் சராசரியாக 137 பெண்கள் கொல்லப்படுவதாகவும் ஐ.நா. அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள் ளது. உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன் முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து ஐ.நா., அவை தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு 83,000 பெண்கள், இளம்பெண்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் சுமார் 50,000 பேர்(60%) தனது தாய், தந்தை, சகோதரர்கள் உள் ளிட்ட நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 137 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவதாகவும் 10 நிமிடத் துக்கு ஒரு பெண் கொல்லப்படுவ தாகவும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆண்களில் 11 சதவீதம் பேர் மட் டுமே குடும்ப உறுப்பினர்கள் அல் லது நெருங்கிய நண்பர்களால் கொல்லப்பட்டுள்ளனர். பாலின சமத்துவமின்மை பாலின சமத்துவம் இல்லாத தாலே பெரும்பான்மையான கொலைகள் நடக்கின்றன என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. மேலும் இடப்பெயர்வு, பொருளாதாரப் பாதுகாப்பின்மை, பாதுகாப்பு அமைப்புகளின் குறைபாடு, இணைய மற்றும் சமூக ஊட கங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முக்கியக் காரண மாக உள்ளன. பெண்களுக்கு எதிராக பாலி யல் வன்கொடுமை, ஆணவக் கொலைகள் அதிகரித்து வரு கின்றன. குறிப்பாக வீடு, பணி யிடங்கள், பள்ளிகள், பொது இடங்கள், சமூக வலைத்தளங்க ளில் நெருங்கிய உறவினர் மூல மாகவே பெண்களுக்கு வன் முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை ஏற்படுகின்றன. உலகளாவிய பிரச்சனை பெண்களை கொலை செய்வ தென்பது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒரு உலகளாவிய நெருக்க டியாக மாறியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான (22,600 ) பெண் கொலைகள் பதிவாகி யுள்ளன. யாருக்கு அதிக பாதிப்பு? அரசியல், பத்திரிகை துறையில் உள்ள பெண்கள், சமூக ஆர்வ லர்கள், பொது வாழ்வில் உள்ள பெண்களே அதிக வன்முறைக்கு ஆளாகின்றனர். அவர்களின் உயி ருக்கான அச்சுறுத்தலும் அதிக மாக உள்ளது. சமூக வலைத்தளங் களில் அதிகமாகச் செயல்படும் பெண்களும் சைபர் ஸ்டாக்கிங் எனும் ஆன்லைன் உரையாடல் மூலமாக துன்புறுத்தப்படுவது அதி கரித்து வருகிறது. பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்பு றுத்துவதற்கும் நவீன தொழில்நுட் பங்கள் காரணமாக இருக்கின்றன. உலகளவில் 4 பெண் பத்திரி கையாளர்களில் ஒருவருக்கு கொலை மிரட்டல் வருகின்றது. 2022 ஆம் ஆண்டு 81 பெண் சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள் மற்றும் 34 பெண் மனித உரிமை பாதுகாவ லர்கள் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். பழங்குடியினப் பெண்க ளும் பல்வேறு விதமான ஆபத்து களை எதிர்கொள்கின்றனர். மேலும், திருநங்கைகளும் இது போன்ற வன்முறைக்கு ஆளாகின்ற னர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
