உலகிலேயே அதிக காற்று மாசுபட்ட நகரம் தில்லி உலக சுகாதார நிறுவன நிர்ணய அளவைவிட 15 மடங்கு அதிகம்
புதுதில்லி உலகிலேயே அதிக காற்று மாசுபட்ட நகரமாக தில்லி பதிவாகியுள்ளது. மேலும் உலக சுகாதார நிறு வனம் நிர்ணயித்துள்ள அளவை விட 15 மடங்கு அதிகமான காற்று மாசு தில்லியில் பதிவாகி யுள்ளது. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அதுவும் ‘பசுமைப் பட்டாசுகளை’ மட்டுமே வெடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தில்லியில் உத்தரவு போடப்பட்டிருந்தது. எனினும் இந்த உத்தரவுகள் முழுமையாக அமலாகவில்லை. மக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பட்டாசு களை வெடித்துள்ளனர். பசுமைப் பட்டாசுகள் அல்லாத மற்ற பட்டா சுகளும் தில்லியில் விற்பனைக்கு கிடைத்துள்ளன. இது போன்ற சட்ட மீறல்களே காற்று மாசுக்கு முக்கியக் காரணம் என கூறப் படுகிறது. காற்றின் மாசு அளவு ஒன்றிய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் (CPCB) தரவுக ளின்படி, 2025 அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு, தில்லியில் மாசு 2.5 மைக்ரான் அளவுள்ள துகளின் மொத்த அளவு ஒரு கன மீட்ட ருக்கு 228 மைக்ரோகிராம்களாக இருந்துள்ளது. 24 மணி நேரத்திற்கு காற்றின் மாசு அளவு அதிகபட்ச அளவாக ஒரு கன மீட்டருக்கு 15 மைக்ரோ கிராம்கள் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் நிர்ண யித்துள்ள அளவை விட 15.1 மடங்கு அதிகமாகும். உலகில் அதிக மாசுபட்ட நகரம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தரத் தொழில்நுட்ப நிறுவ னமான ஐகியூஏர் (IQAir) வெளி யிட்ட தரவுகளின்படி, 2025 அக் டோபர் 21, செவ்வாய்க்கிழமை யன்று காலை உலகிலேயே அதிக மாசுபட்ட நகரமாக தில்லி இருந்தது. அந்நிறுவனம் வெளியிட்ட 120-க்கும் மேற்பட்ட நகரங்களின் பட்டியலில், தில்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) 429 ஆக இருந்தது. இதற்கு அடுத்த இடங்களில் லாகூர் (260), கராச்சி (182) ஆகியவை இருந்தன.