கனமழையுடன் மிரட்டிய “மோந்தா” புயல் ஆந்திராவில் 50,000 பேர் ; ஒடிசாவில் 32,000 பேர் வெளியேற்றம்
வெள்ளக்காடாய் மாறிய 3,700 கிராமங்கள்
விசாகப்பட்டினம் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான “மோந்தா (தாய்லாந்து வழங்கிய பெயர்)” புயல் 3 நாட் களுக்கு முன் சென்னை அருகே மையம் கொண்டு இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்ச மாக நகர்ந்து மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் வட மேற்கு நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி ஆந்திர மாநிலம் மசூலிப் பட்டினத்திற்கு தென்கிழக்கே 200 கி.மீ.க்கும் குறைவான தொலைவிலும், காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே 250 கி.மீ.,க்கும் குறைவான தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே 300 கி.மீ.,க்கும் குறைவான தொலை விலும் மோந்தா புயல் மையம்கொண்டு இருந்தது. மோந்தா புயலால் ஆந்திர கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒடிசாவில் திங்க ளன்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் 16 மாவட்டங் களில் சிவப்பு எச்சரிக்கையுடன் அதீத மழை கொட்டித் தீர்த்தது. 3,700க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாய்க் காட்சி அளித்தன. 50,000 பேர் மோந்தா புயலால் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை வெளி யேற்றி, அரசு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் என். சந்திரபாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளக் கூடிய காக்கிநாடா மற்றும் கோனசீமா பகுதியில் கிட்டத் தட்ட 50,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 126 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என ஆந்திர அரசு சார்பில் செய்திகள் வெளியாகின. 32,000 பேர் மோந்தா புயலால் ஒடிசாவின் தெற்கு பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களில் திங்க ளன்று இரவு முதல் அதீத அளவில் கனமழை பெய்தது. இதனால் புயலால் பாதிக்கப்படக் கூடிய இடங்களிலிருந்து 32,000க்கும் அதிக மானோரை ஒடிசா அரசு வெளியேற்றி பாது காப்பான இடங்களில் தங்க வைத்தது.
