பழங்குடியின மக்களை துரத்த துடிக்கும் பாஜக அரசு பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக சிபிஎம்
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் முதலமைச்சரின் இல்லத்திற்கு அருகே வாழும் பழங்குடியின மக்களை அவர்களின் இருப்பிடத்தை விட்டுத் துரத்த பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. முதல்வரின் இல்லத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் பழங்குடியின மக்களின் பழமையான குடியிருப்பு அமைந்துள்ளது. தீபாவளி முதல் அவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பாஜக அரசு இறங்கி யுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்த லின் பேரில், அந்த குடியிருப்பைக் காலி செய்யுமாறு அம்மக்களுக்கு பாஜக அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், இந்தக் கிராம மக்கள் வசிக்கும் நிலத்திற்கான வீட்டு மனை உரிமங்களை (பட்டா அல்லது குத்தகை உரிமை) வழங்குவதற்காக குறைந்தது 18 முறை அரசு அறிவிப்பு களை வெளியிட்டுள்ளது. இதைத் தவிர, இந்தப் பழங்குடி யினக் குடும்பங்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தின் மீதுள்ள வன உரிமைகளுக்கா கவும் அரசிடம் முறையாக விண்ணப் பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனாலும், அம்மக்களை எப்படி யாவது வெளியேற்ற வேண்டும் என பாஜக அரசு துடித்து வருகிறது. இந்நிலை யில் தீபாவளி நாளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் விவ சாயிகள் சங்கத் தலைவர்கள் அங்கு சென்று அந்த மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.