காங்கிரஸ் எம்.பி., பிரமோத் திவாரி
மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதற்காக பாஜக அரசு மதம், சாதி மற்றும் பிரிவுகளின் பெயரால் மோதல்களை உருவாக்குகிறது. புதிய யுஜிசி விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் முடிவை நான் வரவேற்கிறேன்.
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்
லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 4 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் பிப்., 2-க்கு ஒத்திவைத்துள்ளது. நீதி அரசர்களே, தனிநபர் சுதந்திரம் எங்கே போனது?
மூத்த பத்திரிகையாளர் பிரதீப்
இந்தியாவில் கிரிக்கெட் இதழியல் தனது நிதானத்தை இழந்துவிட்டது. இப்போது அது சமூக வலைதளத் தறுதலைகளின் விருப்பத்திற்கேற்பச் செயல்படுகிறது. கிரிக்கெட் தொடர்பான கண்ணியத்தை சேதப்படுத்தும் தொழிலைச் செய்வதை விட, சியர்லீடர்ஸ் (நடனம் ஆடும்) குழுவில் சேர்ந்துவிடலாமே!
திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா
தேர்தலுக்கு முன்னதாக அனைத்து பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்திற்கு வருகிறார்கள். பொதுக்கூட்டங்களின் போது அவர்களிடம் சில குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் அப்படியே வாசிக்கிறார்கள். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ரவீந்திரநாத் தாகூருக்கு ‘நோபல் அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டதாகக் கூறுகிறார். அவர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார். வேறு என்ன சொல்ல முடியும்!
