states

img

அஜித் பவார் உடல் தகனம்

அஜித் பவார் உடல் தகனம்

மகாராஷ்டிரா துணை முதல மைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரு மான அஜித் பவார் (66) பயணம் செய்த சிறிய ரக விமானம், புதனன்று காலை  புனே மாவட்டத்தில் உள்ள பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக் குள்ளானது. இதில் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.  அகில்யாபாய் ஹோல்கர் அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேதப் பரிசோ தனைக்குப் பின் 5 பேரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில் அஜித் பவாரின் உடல் மருத்துவ மனையிலிருந்து காட்டேவாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வியாழனன்று காலை அஜித் பவாரின் உடலில் தேசியக் கொடி போர்த்தப் பட்டு, ஊர்வலமாக வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பகல் 12 மணியளவில் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அஜித் பவாரின் சித்தப்பாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார், ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதல மைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் “இந்தியா” கூட்டணிக் கட்சித் தலை வர்கள் பங்கேற்றனர்.