states

தீக்கதிர் விரைவு செய்திகள்

திருப்பதி லட்டு வழக்கில் இதுவரை பரிசோ திக்கப்பட்ட மாதிரிகளில் விலங்குகளின் கொழுப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என சிபிஐ கூறியுள்ளது. இதன்மூலம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்துள்ளன.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் புதனன்று தொடங்கியது. தொடர்ந்து வியாழனன்று நாடாளுமன்ற மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் பயணித்த சிறிய ரக விமானம் புதன்கிழமை விபத்துக் குள்ளான நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது.