தடையை மீறி மால்டாவில் சிபிஎம் பொதுக்கூட்டம் 50 ஆயிரம் பேர் குவிந்தனர்
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள பிருந்தாபனி மைதானத்தில் ஜனவரி 24 அன்று கட்சியின் நிர்வாக வலிமை யையும், அரசியல் செல்வாக்கையும் பறை சாற்றும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு, காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கேட்கப் பட்டது. சிபிஎம் பொதுக்கூட்டம் என்றாலே அச்சத்தில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வழக்கம் போல பல்வேறு காரணங்களைக் கூறி, பிருந்தாபனி மைதானத்தில் நடைபெற இருந்த சிபிஎம் பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. 50,000 பேர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்ன தாக மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டதாக சிபிஎம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். எனினும் தடையை மீறி, பிருந்தாபனி மைதானம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிபிஎம் பொ துக்கூட்டம் நடைபெற்றது. மைதானம் சீல் வைக் கப்பட்டதால், கட்சி ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமெனத் திரண்ட னர். செங்கொடிகள், பதாகைகள் மற்றும் முழக்கங்களால் தேசிய நெடுஞ்சாலை செங்கட லாக மாறியது. 50,000-க்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதால், மால்டா மாவட்டத்தின் பெரும்பகுதிகளில் போக்கு வரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இது மார்க்சி ஸ்ட் கட்சியின் அடிமட்ட அளவிலான கட்ட மைப்பு வலிமையையும், ஜனநாயக உரிமை களை நசுக்க நினைக்கும் முயற்சிகளுக்கு எதி ரான பொதுமக்களின் கோபத்தையும் வெளிப் படுத்தியது. தேர்தல் ஆணையம் ஒரு ‘கைப்பாவை’ பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநிலச் செயலாளருமான முகமது சலீம் உரையாற்று கையில், “மால்டா மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டப் பாரம்பரியத்தை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை ஒரு கேலிக் கூத்தாக மாற்றத் துடிக்கிறது. ஆர்எஸ்எஸ் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. குறிப்பாக, வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் ஏழை மக்கள், முஸ்லிம்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாக்குரிமை திட்டமிட்டு பறிக்கப்படு கிறது. எஸ்ஐஆர் தேசிய குடிமக்கள் பதிவேட் டின் (என்ஆர்சி) ஒரு மறைமுக வடிவமாகும். என்ஆர்சி-யை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை, இருப்பினும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அரசி யல் அழுத்தத்தின் காரணமாக இதை முன்னெ டுத்துச் செல்கிறார். இந்தச் செயல்முறை அடை யாளப்படுத்துவதற்காக அல்ல, மாறாக இந்தி யாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சிதைப்ப தற்காகவும், மக்களைப் புறக்கணிப்பதற்கா கவும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. மதவாதப் பிரிவினைக்கு எச்சரிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பானது இந்தியாவை ஒரு “மனுதர்ம அடிப்படையிலான மத நாடாக” மாற்றவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையைச் சிதைக்கவும் முயல்கி றது. ஆர்எஸ்எஸ் நாட்டை துண்டாடி ஒரு மத வாத நாடாக மாற்ற விரும்புகிறது. விடுதலைப் போராட்டத்திலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘ஆசாத் ஹிந்த் பவுஜ்’ படையிலும், இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று போரிட்டனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழி லாளர்கள் சந்திக்கும் துன்புறுத்தல்கள் மிக மோச மாக உள்ளது. சிறுபான்மையினரையும் உழைக்கும் வர்க்கத்தையும் இலக்கு வைக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அரசியல் உத்தி இழி வானது. இந்தியாவின் நகரங்களையும் தொ ழில்களையும் கட்டமைப்பவர்கள் நமது தொழி லாளர்கள். ஆனால் அவர்கள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே குறிவைக்கப் படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மால்டா: போராட்டத்தின் சின்னம் இடதுசாரி இயக்கங்களின் கோட்டையா கவும், போராட்டப் பாரம்பரியம் கொண்ட இடமா கவும் கருதப்படும் மால்டா, இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றுக் குறியீடாக மாறி யுள்ளது. இந்த மாவட்டம் எப்போதும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. இன்று, மால்டாவை அமைதியாக்க முடியாது என்பதை நீங்கள் நாட்டிற்கு நிரூபிக்கிறீர்கள்” என அவர் பெரு மையுடன் பிரகடனப்படுத்தினார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் மீனாட்சி முகர்ஜி, மூத்த தலைவர் அம்பர் மித்ரா ஆகியோ ரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
