13 நிமிடங்கள் வட்டமடித்த விமானம் கடைசி நேரத்தில் பல்டி அடித்தது 2ஆவது சிசிடிவி காட்சிகள் மூலம் சர்ச்சை
புனே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் “பாம்பார்டி யர் லியர்ஜெட்- 45 (VT-SSK)” ரக தனியார் சொகுசு ஜெட் (Business Jet) வகை ஆகும். இந்த விமானம் புதனன்று காலை 8:11 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டது. 8:30 மணியள வில் பாரமதியில் முதலில் தரையிறங்க முயன்றது. ஆனால் போதிய வெளிச்சம் இல்லா ததால் விமானத்தால் தரையிறங்க முடிய வில்லை. இதையடுத்து விமானம் மீண்டும் காலை 8:43 மணியளவில் இரண்டாவது முறை யாகத் தரையிறங்க முயன்றது. அதுவரை எல்லாமே சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆனால், 8:43 மணிக்கு மேல் விமானம் ரேடா ரில் இருந்து மறைந்தது. அடுத்த 2 அல்லது ஒன்ற ரை நிமிடங்களில் விமானம் என்னவானது என்பது தெரியவில்லை. ரேடாரிலும் சிக்க வில்லை. அதன் பிறகு 8.44 முதல் 8.45 மணிக்குள் பாரமதி விமான நிலைய ஓடுபாதை அருகே தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது என விசாரணை முடிவுகள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக புத னன்று இரவு ஒரே ஒரு சிசிடிவி காட்சிகள் மட்டுமே வெளியாகி இருந்தன. நெடுஞ்சாலை க்கு அருகே கிடைக்கப்பெற்ற அந்த காட்சியில் விமானம் வெடித்து சிதறிய காட்சிகள் மட்டுமே தெரிந்தன. அதன்பிறகு புதனன்று நள்ளி ரவு விமானநிலையம் அருகே உள்ள பகுதியிலி ருந்து 2ஆவது சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில் விமானம் வழக்கத்திற்கு மாறாக விமா னப்படை சாகசங்களில் நிகழ்வது போன்று ஒரு முறை வானிலேயே சுற்றி (பக்கவாட்டு பல்டி) கீழே விழுந்த காட்சி பதிவாகியுள்ளது. சர்ச்சை பொதுவாக விபத்துக்குள்ளாகும் பயணி கள் விமானங்கள் குலுங்கும் அல்லது முன் பக்கம் - பின்பக்கம் குலுங்கிடும். அடுத்த ஒரு நொடியில் அப்படியே கீழே விழுந்துவிடும். விபத்துக்குள்ளான விமானங்களின் சிசிடிவி காட்சிகள் இவ்வாறு தான் உள்ளன. ஆனால் அஜித் பவார் பயணித்த விமானம், வழக்கத்தி ற்கு மாறாக பல்டி அடித்து சுற்றி விழுந்தது எப்படி என்று கேள்விகள் கிளம்பியுள்ளன. அதா வது 2 நிமிடங்கள் ரேடாரில் இல்லாமலும், 13 நிமிடங்கள் விமானம் வட்டமடித்தது என்று கூறப் படும் நிலையில், கடைசி நேரத்தில் மட்டும் சுற்றி விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
