புதிய யுஜிசி விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மதம் மற்றும் பாலின ரீதியான பாகு பாடுகளை களைய புதிய விதிமுறை களை யுஜிசி கொண்டு வந்தது. ஜனவரி 13, 2026 அன்று வெளியான யுஜிசியின் புதிய விதிமுறைகளில் உள்ள குறிப்பிட்ட அம்சங்கள், அரசி யலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் வழக்கும் பதிவு செய் யப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வியாழ னன்று தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் யுஜிசியின் புதிய சமூக பாகுபாடு விதிமுறைகளுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பில் புதிய விதிமுறைகளில் போதுமான தெளிவு எதுவும் இல்லை. சமூக பாகு பாடு என்பது பாதிக்கப்படும் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஆதரவாக இருக்க வேண்டும். இதில் பாதிக்கப்படும் ஒரு சமூகத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியாது. புதிய விதிமுறைகளில் பொ துப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, சமத்துவ குழுக்களில் பொதுப் பிரிவினர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாதது, ஒருதலைபட்சமாக உள்ளது. இதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் புதிய விதி முறைகளுக்கு தடை விதித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையைத் தொடர்ந்து மறு உத்தரவு வெளியாகும் வரை, யுஜிசியின் முந்தைய விதிமுறை களே தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் புதிய விதிகளை மறு சீரமைப்பு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
