மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு
எஸ்எப்ஐ போராட்டம் விருதுநகர், ஜன.29- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள வி.பி. முத்தையாபிள்ளை-மீனாட்சியம் மாள் கலைக்கல்லூரி கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் தரா மல் அலைக்கழிப்பு செய்ததைக் கண் டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவில் அருகேயுள் ளது வி.பி.எம் மகளிர் கல்லூரி. இக் கல்லூரி நிர்வாகம் அரசிடம் முறை யாக அனுமதி பெறாமல் மாணவர் களையும் சேர்த்துள்ளது. கல்லூரி படிப்பு நிறைவடையும் நிலையில் அனுமதியில்லை என்ற தகவல் வெளி வந்துள்ளது. இதனால் மாண வர்களுக்கு சான்றிதழும் கிடைக்க வில்லை. இதுகுறித்து மாணவர்கள் பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போதும் உரிய தீர்வு கிடைக்க வில்லை. இந்த நிலையில், வியாழ னன்று காலை மாணவர் சங்கம் தலை மையில் கல்லூரியை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தன் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
