வெட்டாதீர்கள்..!
நாடு முழுவதும் இருக்கும் நவோதயா பள்ளி களில் சிறந்த முறையில் இயங்கும் பள்ளிக ளுக்கு விருது வழங்குவதை ஒன்றிய அரசு தொடங்கி வைத்துள்ளது. முதன்முறையாக வழங்கப்பட்ட விருதுகளை இரண்டு பள்ளிகள் பெற்றுள்ளன. ஒன்று, இமாச்சலப் பிரதேசத்திலும், மற்றொன்று சத்தீஸ்க ரிலும் உள்ளன. விருது செய்தியைப் படித்தவுடன், சமூக வலைத்தளங்களில் பெற்றோர்கள் குமுறியுள்ளனர். நிதி ஒதுக்கீடு இல்லை.. ஆசிரியர்கள் இல்லை... முறையாக கற் பித்தல் கருவிகள் இல்லை.. கட்டடங்கள் மராமத்து இல்லை.. நிதியை வெட்டிவிட்டு விருதுகள் வழங்குவதில் என்ன பலன் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இப்படித்தான் கழிவுநீர் மேலாண்மைக்கு விருது தந்து, நாட்டிலேயே சிறந்த நகரம் என்று இந்தூரைச் சொன்னார்கள். என்ன ஆச்சுனு பார்த்தோமே என்று கழுவி ஊற்றுகிறார்கள்.
வெட்டிவிட்டனர்
தனது வழக்கமான சடங்குகளைச் செய்யாமல் திரிவேணி சங்கமத்தில் குளிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த “சங்கராச்சார்யா” அவி முக்தேஷ்வரானந்த், குளிக்காமலேயே திரும்பியுள்ளார். மாட்டுக்கறி உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் அதிக மாக ஏற்றுமதி ஆகிறது என்ற அவரது கருத்தால், ஆதித்ய நாத் ஆத்திரமடைந்தார். கடந்த ஆண்டு கும்பமேளா வின்போது இவரை சங்கராச்சார்யா என்று சொல்லி, அரசு விளம்பரங்களில் இடம் கொடுத்தனர். பிரதமர் மோடியே வளைந்து, குனிந்து இவரை வணங்கினார். மாட்டுக் கறி பற்றிய உண்மையைச் சொன்னவுடன் சங்கராச்சார் யா என்று சொல்லிக் கொள்கிறீர்களே.. என்ன ஆதாரம் என்று கேட்டு அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தனர். திரிவேணி சங்கமத்தில் குளிக்க விடாமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். \வெட்டு ஒண்ணு, துண்டு 16,000\ பன்னாட்டுப் பெரு நிறுவனமான அமேசான், 16 ஆயிரம் பணியிடங்களைக் காலி செய்திருக்கி றது. இந்தப் பணியிடங்களை மறுபடியும் நிரப்பப் போவதில்லை. இந்த வேலை வெட்டு, இந்தியாவில் உள்ள பணியிடங்களை குறிவைத்தே நடந்துள்ளது. மற்ற நாடு களில் உள்ள அலுவலகங்களிலும் வேலை வெட்டு இருக்கத்தான் போகிறது. இது பற்றிய கேள்விக்கு, ஏதோ நாட்டுக்கு நல்லது செய்வது போல அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆன்டி ஜஸ்ஸி கூறி யிருக்கிறார். விரிவான இலக்கை அடையவே இதைச் செய்கிறோம் என்கிறார்கள். அந்த விரிவான இலக்கு என்ன என்பதையும் வெளிப்படுத்தவில்லை. இதோடு நிற்க வில்லை. இரண்டாவது சுற்று வேலை வெட்டும் இருக்கி றது. இன்னும் எத்தனை சுற்று இருக்குன்னு தெரியலையே என்று தலை சுற்றிப் போயிருக்கிறார்கள் ஊழியர்கள். நிறைய வெட்டு, உயர்வோ 16 சத்தீஸ்கர் மாநிலத்தில் மதிய உணவு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு காலவரையற்ற உண்ணா நோன்புப் போராட்டத்தில் உள்ளனர். தற்போது அவர்களுக்கு ரூ.66 ஒருநாள் ஊதி யமாக வழங்கப்படுகிறது. தங்கள் ஒரு நாள் ஊதியத்தை ரூ.340 ஆக உயர்த்த வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாகும். தொ டர் போராட்டத்தில் இருந்த இரண்டு ஊழியர்களான ருக்மணி, துலாரி ஆகியோர் தங்கள் உயிரை இழந் துள்ளனர். மதிய உணவு ஊழியர்களின் போராட் டத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்று தான் மாநில பாஜக அரசு நினைத்தது. ஆனால், உறுதி யுடன் போராட்டம் தொடர்ந்தது. ஒரு நாளைக்கு ரூ.16 அதிகமாகக் கொடுத்து, முடித்து விடலாம் என்று நினைத்தனர். ஊழியர்கள் ஏற்கவில்லை. இப்போது இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளன. போராட்டம் தொடர்கிறது.
