பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் நச்சுப் பற்களை பிடுங்க வேண்டும் எம்.ஏ.பேபி பேச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில மாநாடு தும்கூரில் நடை பெற்று வருகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி பேசுகை யில்,”இந்தியாவை வகுப்புவாத அடிப் படையில் பிரிக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக கர்நாடகம் ஒரு பரந்த மக்கள் தளத்தை உருவாக்க வேண்டும். மக்களவை தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று அரசியல மைப்பில் திருத்தம் செய்து இந்து ராஷ்டி ராவை அமைப்பதுதான் சங்பரிவாரின் திட்டம். ஆனால் பாஜகவுக்கு தனித்து மெஜாரிட்டி கொடுக்காமல் இந்த ஆபத்தை தற்போதைக்கு மக்கள் தடுத் துள்ளனர். அனைத்து வகையான வகுப்பு வாத விஷங்களையும் தடுத்து நிறுத்தி, பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் நச்சுப் பற்களை பிடுங்கினால்தான் இந்தியாவில் மதச் சுதந்திரம், சுதந்திர சிந்தனை, ஜனநாயகம் உதயமாகும்” என அவர் பேசினார்.