சட்டமன்ற தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக முர்ஷிதாபாத் வன்முறையை கையிலெடுத்த பாஜக
ஆளுநர், மத்திய ஆணையங்கள் மூலமும் பெரிதாக்கப்படும் பிரச்சனை
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதா பாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போ ராட்ட களத்திற்குள் புகுந்த ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் வன்முறை வெறி யாட்டத்தை (ஏப்ரல் 8 முதல் 13 வரை) நிகழ்த்தினர். பதிலடி என்ற பெயரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண் டர்கள் வன்முறையில் இறங்க, முர்ஷி தாபாத் மாவட்டம் கலவர பூமியானது. முர்ஷிதாபாத் மட்டுமின்றி மால்டா, தெற்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட 4 மா வட்டங்களிலும் (முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகள்) வன்முறை வெடித் தது. வன்முறையில் சிக்கி முர்ஷிதா பாத் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் நாசமாகின. இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் (மார்ச் - ஏப்ரல் மாதம்) நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு முர்ஷிதாபாத் வன்முறையை அரசி யல் ஆதாயத்துக்காக பாஜக கையி லெடுத்துள்ளது. பாஜகவின் கைப் பாவையாக செயல்பட்டு வரும் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டா பகுதியில் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் தேசிய மகளிர் ஆணைய (NCW) குழுக்களும் சென்றன. சனிக் கிழமை அன்று ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் தலைமையிலான மத்தியக் குழு முர்ஷிதாபாத்தில் ஆய்வு மேற் கொண்டது. மோடி அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர், “முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வன் முறை நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் அவல நிலையை விவ ரித்தனர். வன்முறையால் பாதிக்கப் பட்ட முர்ஷிதாபாத்தில் நிரந்தர எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். 3 உயிர்களைக் கொன்ற வகுப்புவாத மோதல்கள் குறித்து என்ஐஏ (தேசிய புலனாய்வு நிறுவனம்) விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்க ளிடம், ஒன்றிய அரசு அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதால், கவலைப் படுவதற்கு எந்த காரணமும் இல்லை” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதி ராகவும், மோடி அரசுக்கு ஆதரவாக வும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஏன் இந்த அவசரம்? வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்க ளில் இன்னும் இயல்பு நிலை திரும்ப வில்லை. இத்தகைய சூழலில் மாநில அரசின் கோரிக்கையை மீறி மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் தேசிய மகளிர் ஆணை யம் அவசரமாக ஆய்வு மேற்கொண் டது ஏன்? மேற்கு வங்க மாநில அரசு வன் முறை நிலைமையை முழுமையாக மதிப்பீடு செய்வதற்குள், வன்முறை யால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநர் ஏன் அவசரமாக சென்றார்? சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜக தான் மக்கள் நலன் மீது அக்கறை கொண் ண்டுள்ளது என்ற பாசாங்கு தனத்தை வெளிப்படுத்தும் வகையில் முர்ஷிதாபாத் செல்ல ஆளுநர், மத்திய ஆணையங்களுக்கு மோடி அரசு உத்தரவிட்டதா? என்ற பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ளன.