5 வயது மகனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கூலி தொழிலாளி
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனை, ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளுக்கு இடை யேயான அதிகார மோதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிக்கவே ஆளும் கூட்டணிக் கட்சியின் முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள், அமைச்சர் கள், எம்எல்ஏக்களுக்கு நேரம் போது மானதாக இருக்கிறது. இதனால் பீகார் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லா மல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சமஸ்திபூர் அருகே கூலித் தொழிலாளியின் 5 வயது மகன் உடல்நலக்குறைவால் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மகனின் உடலை தனது கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சமஸ்திபூர் மாவட்ட மருத்துவ மனை நிர்வாகத்திடம் துக்க நேரத்திலும் கூலித் தொழிலாளி போராடியுள்ளார். ஆனால் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க மறுத்துவிட்டது. கூலித் தொழி லாளியிடம் தனியார் ஆம்புலன்ஸ் வச தியை ஏற்பாடு செய்ய பண வசதி இல்லை. இதனால் உறவினரின் இருசக்கர வாகனத்தின் மூலம் தனது 5 வயது மகனை தனது சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளார் கூலித் தொழி லாளி. இந்த நிகழ்வு சமூகவலைத் தளங்களில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.