காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா
போர் பதற்றமான சூழலில் கூட பாஜக அரசியல் மேற்கொள்கிறது. அரசியல் செய்ய வேண்டிய நேரமா இது? அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லையா? ஒற்றுமைக்கான செய்தியைக் கொடுக்க வேண்டிய நேரம் இதுவல்லவா? அரசாங்கமும் பாஜகவும் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.
திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா
மாண்புமிகு பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் “பொறுப்பற்றவர்”, “அறிவில்லாதவர்”, “அபத்தமானவர்”, “பாரபட்சமானவர்”, “கயமையானவர்”, “மோசமான நோக்கம்’’ கொண்டவர் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறது. இதற்கு அவர் என்ன சொல்ல போகிறார்?
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பை எனது இதயத்தின் ஆழத் திலிருந்து வரவேற்கிறேன். எப்போதும் இல்லாததை விட தாமதமாகிவிட்டது; ஆனாலும் நல்லது. போர் நிறுத்தம் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாக வந்தி ருந்தால், நாம் கண்ட ரத்தக்களரியும், இழந்த விலை மதிப்பற்ற உயிர்களும் பாதுகாப்பாக இருந்திருக்கும்.
சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத்
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சரத் பவார் தலைமையிலான அணி இணைவதாக கூறப்படுகிறது. இது நடந்தாலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி தனது நிலைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. அதாவது ஷிண்டே அணியில் இணைவது பற்றி எங்களிடம் சிறுதுளி எண்ணம் கூட இல்லை.