கேரள பல்கலைக்கழகங்களை உலுக்கிய மாணவர் போராட்டங்கள்
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அனுமதிக்க மாட்டோம்!
திருவனந்தபுரம் பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கும் முயற்சிகளுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தனது போராட்டங்க ளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆளுநர் நியமித்த துணைவேந்தர்களுக்கு எதிராக கண்ணூர் மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகங்களை நோக்கி, எஸ்எப்ஐ சார்பில் நடைபெற்ற பேர ணியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அணிவகுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பெரும் தடுப்புகள் அமைத்து, ஆர்ப்பாட்டம் செய்ய வந்த மாண வர்களை தடுக்க முயன்றனர். ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்தது. பேரணியின் போது பதற்றம் நிலவியது. காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். விருந்தினர் மாளிகை வளா கத்திலிருந்து கோழிக்கோடு பல்கலைக்கழ கத்திற்கு பேரணி தொடங்கியது. கொண்டோட்டி டிஎஸ்பி சந்தோஷ் குமார் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவு க்கு முன்னால் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்க ளுக்கும் இடையே நீண்ட நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணி வருவதற்கு முன்பு, இடைக் கால துணைவேந்தர் டாக்டர் பி. ரவீந்திரன்போ ராட்டங்களுக்கு அஞ்சி அலுவலகத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். முன்னதாக பேரணியை எஸ்எப்ஐ மாநில இணைச் செயலாளர் முகமது சாதிக் தொடங்கி வைத்தார். கண்ணூர் இதுபோல் கண்ணூர் பல்கலைக்கழகத்தில், ஆர்வலர்கள் தடுப்புகளைத் தாண்டி ஏறி பல் கலைக்கழக நிர்வாக வளாகத்துக்குள் நுழைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கண்ணூர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை எஸ்எப்ஐ மத்தியக் குழு உறுப்பினர் பிபின்ராஜ் பாயம் தொடங்கி வைத்தார்.