states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எஸ்எப்ஐ கேரள மாநிலத் தலைவர் எம். சிவபிரசாத்

கேரளாவில் உயர்கல்வித் துறையைப் பாதுகாக்க எஸ்எப்ஐ போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான இடைவிடாத - வலுவான போராட்டம் தொடரும். ஜுலை 10இல் கேரள பல்கலைக்கழகம் மற்றும் ஆளுநர் மாளிகை முன்பு எஸ்எப்ஐ போராட்டம் நடத்தும். கேரளம் மதச்சார்பின்மையின் கோட்டையாகும். ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை காட்டுகிறார்.

ஊடகவியலாளர் பார்த் எம்.என்.

ஒரு வருடத்துக்கு முன் நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பீகார் வாக்காளர்கள், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் திடீரென தங்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்த ஆச்சர்யமான கேலிக்கூத்தை நடத்திக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

ஒருபக்கம் பாஜகவினர் பழங்குடி மக்களின் உரிமைகளை பேசுவார்கள். மறுபக்கத்தில் பழங்குடி மக்களின் நிலம், வளங்கள் என எல்லாவற்றையும் எந்தத் தயக்க முமின்றி கொள்ளையடிப்பார்கள். வனங்களை அழித்து பழங்குடி மக்களை வெளியேற்றுவார்கள். 

ஊடகவியலாளர் ராணா அயூப்

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.இனப்படு கொலை செய்பவர்களும், இனப்படு கொலையை அனுமதிப்பவர்களும், பாசிஸ்டுகளும் நோபல் அமைதிப் பரிசு மேல் கொண்டிருக்கும் ஆர்வத்தை பார்க்கும் போது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.