states

img

உ.பி.,யில் பாலஸ்தீன கொடியுடன் டி-சர்ட்

உ.பி.,யில் பாலஸ்தீன கொடியுடன் டி-சர்ட்

4 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல மைச்சராக கோராக்பூர் மடத்தின் சாமியாரான ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6ஆம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட டி-சர்ட்டு களை அணிந்து பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ பதிவுகள் இணை யத்தில் வைரலாகியது. இதனை தொ டர்ந்து பாலஸ்தீனக் கொடி அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்களை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. 4 பேரின் மீதும் பிஎன்எஸ் 197 பிரிவின்  கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.