தில்லியை நோக்கி வந்த பாகிஸ்தான் ஏவுகணை
ஹரியானாவில் பெரும் இழப்பு தவிர்ப்பு
புதுதில்லி இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதலைய டுத்து பாகிஸ்தான் நாடு “ஆபரேசன் புன்யான் உல் மர்சூஸ்” என்ற பெயரில் இந்திய எல்லை மாநி லங்களில் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. பாகிஸ்தானின் இந்த தொடர் டிரோன் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எந்த சமரசமும் இன்றி துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தையும் அழித்தொழித்துள்ளதாக இந்திய ராணுவம் சனிக்கிழமை அன்று காலை தன்னுடைய அதிகாரப் பூர்வ டுவிட்டர் எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சனியன்று காலை தில்லியை நோக்கி “பதே - 2” என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ராணு வம் ஏவியது. ஜம்மு-காஷ்மீரில் இந்திய ஏவுகணை தடுப்பில் இருந்து “பதே - 2” ஏவுகணை தப்பியது. எனினும் ஏவுகணையை ஹரியானாவின் சிர்சாவில் வழி மறித்து இந்திய வான்வெளி பாது காப்பு அமைப்பு அழித்துள்ளது. இல்லையென்றால் பாகிஸ்தானின் “பதே - 2” ஏவுகணை சரியாக தில்லி பாலம் விமான நிலையத்தை தாக்கி இருக்கும். தலைநகரில் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3ஆவது நாளாக இருளில் மூழ்கிய 4 மாநிலங்கள்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், 3ஆவது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மின் சாரம் இன்றி இருளில் மூழ்கி யுள்ளன. இமாச்சலப் பிரதேசத் தின் சில பகுதிகள் மற்றும் லே உள்ளிட்ட பகுதிகளும் 2ஆவது நாளாக மின்சாரம் இன்றி தவித்தன.
ஜம்மு-காஷ்மீர் அரசு உயரதிகாரி உட்பட 6 பேர் பலி
பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் மூத்த அரசு உயரதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. ரஜோரி நகரத்தில் உள்ள அரசு அதிகாரப்பூர்வ இல்லத் தில் பீரங்கி குண்டு வீசப்பட்ட தில், ரஜோரியின் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ் குமார் தாபா மற்றும் அவ ரது இரண்டு ஊழியர்கள் படுகாய மடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றவர்கள் யார் என்ற தகவல் வெளியாக வில்லை. ஆனால் 5 பேர் அரசு அலுவலக ஊழியர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் 8 பேர் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கள் என்றும் கூறப்படுகிறது.
காலிக் கூடாரமானது பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா மாவட்டங்கள்
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஜம்மு-காஷ்மீரின் பார முல்லா, பந்திபோரா, குப்வாரா ஆகிய மூன்று மாவட்டங்கள் காலி கூடாரமானது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஓசி) அருகில் உள்ள மக் கள் மட்டுமின்றி 3 மாவட்டங்க ளில் உள்ள ஒட்டுமொத்த மக்க ளும் பாதுகாப்பான இடங்களு க்கு இடம்பெயர்ந்து வருகின்ற னர். வெள்ளி, சனிக்கிழமை என இரண்டு நாட்களில் 3 மாவட் டங்களிலும் 1.10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டதாக ஜம்மு-காஷ்மீர் அரசு அதிகாரிகள் தெரி வித்தனர்.