tamilnadu

img

எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

திருவண்ணாமலை,மே. 10- திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில், “கணினி அறிவியல், பொறியிய லின்  சமீபத்திய போக்கு கள் மற்றும் வளர்ச்சி கள்”குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்விக் குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செய லாளர்  அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதி காரி முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் என்.புருஷோத்தமன் வர வேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனை வர் எஸ்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினர்களை கவுர வித்து கருத்தரங்கின் நோக்கம் குறித்து எடுத்து ரைத்தார் உடன் பிஆர்ஓ சையத் ஜகிருத்தீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக திண்டி வனம் அண்ணா பல்கலைக்  கழக உறுப்பு கல்லூரி யின் பேராசிரியர் துறைத்  தலைவர் சண்மு கம் மில்டன் கணேஷ் மற்றும் இப்போபே நிறுவனத்தின் அப்ளிகேஷன் டெவலப்பர் திரு, சஞ்சய் எழில்மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு கணினி அறிவியல் மற்றும் மென்பொருள் துறையின் சமீபத்திய வளர்ச்சிகள், ஆராய்ச்சிக்கான வாய்ப்பு கள் மற்றும் வேலை வாய்ப்பு கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். இந்த தேசிய அளவி லான கருத்தரங்கில் டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழ கம், தக்க்ஷ ஷீலா பல்கலைக்  கழகம், ஐஐஐடி ஹைத ராபாத் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.