சிதம்பரத்தில் வீடுகளை இழந்து பரிதவிக்கும் ஏழைகள்
மாற்று இடத்தில் வீடு வழங்க சாராட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
சிதம்பரம், மே 10- சிதம்பரத்தில் வீடுகளை இழந்த 7 ஆண்டுகளாக பரிதவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாராட்சியரிடம் வலி யுறுத்தப்பட்டது. சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த ஏழை எளிய மக்களின் வீடுகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மாற்று இடம் வழங்க வில்லை. இதனால், கல்வி மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து, பாதித்த மக்க ளுக்கு விரைவாக மாற்று இடம் வழங்குவ தாக உறுதியளித்த வட்டாட்சியர், அதற்கான டோக்கனும் வழங்கினார். ஆனால் இதுவரைக்கும் மாற்று இடமே, வீடோ வழங்கவில்லை. இதனால், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலை மையில் சாராட்சியர் அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது நடத்திய பேச்சுவார்த்தையில், 3 மாதத்திற்கு மாற்று இடம் வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே, வீடுகள் இழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் நகர செயலாளர் ராஜா தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர் குழு உறுப்பினர்கள் சிதம்பரம் சாராட்சி யர் கிஷன் குமாரை சந்தித்து வலி யுறுத்தினர்.