எல்லைப் பகுதிகளில் தவித்த மாணவர்களுக்கு எஸ்எப்ஐ உடனடி உதவி
ஹெல்ப்லைன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு
புதுதில்லி பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ் தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக எல்லைப் பகுதிகளில் சிக்கிய மாணவர்களு க்கு உடனடி உதவியை வழங்கும் நோக்கில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ - SFI) தில்லி கிளை ஒரு ஹெல்ப்லைன் தளத்தை அமை த்து செயல்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் இந்த ஹெல் ப்லைன் மூலமாக நூற்றுக்க ணக்கான மாணவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்களில் ஜம்மு பல்கலைக்கழகம், சென்ட்ரல் யூனிவர்சிட்டி ஆப் பஞ்சாப், லவ்லி புரொபெஷனல் யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் கல்வி பயி லும் மாணவர்கள் அடங்கு கின்றனர். மாணவர்களின் நலனுக்காக எஸ்எப்ஐ நேரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிக்கலில் இருந்த மாணவர்களை தக்க சமயத்தில் பாதுகாப்பாக வெளியேற்றியும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியையும் எஸ்எப்ஐ முன்னெடுத்தது. இந்த ஹெல்ப்லைன் செயல் பாட்டில் எஸ்எப்ஐ தில்லி மாநிலச் செயலாளர் அய்சே கோஷ், மாநி லத் தலைவர் சூராஜ் எலமோன், மாநில இணைச் செயலாளர் மெஹினா பாத்திமா, மாநிலக்குழு உறுப்பினர் அனில் சேதுமாதவன் ஆகியோர் நேரடியாக பங்கேற்ற னர். ரயில் நிலையத்தில் மாணவர்க ளை வரவேற்று, அவர்கள் பாது காப்பான குடியிருப்புகளுக்கு செல்லும் வரை முழுமையான கண்காணிப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு, உதவிகள் வழங்கப் பட்டன. மேலும் ஹெச்.கே.எஸ்.சுர்ஜித் பவனில் மாணவர்களை எஸ்எப்ஐ தேசிய இணைச் செயலாளர் தீப்சிதா தார் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் அபிஜித் எம்.எல் ஆகியோர் நேரில் சந்தி த்து வரவேற்றனர். அவர்களின் உடல்நிலை, உணவு, தங்குமிடம் மற்றும் மனநலத்தைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த ஹெல்ப்லைன் தற்போது தொடர்ந்து இயங்கிக்கொண்டி ருக்கிறது. எஸ்எப்ஐ தொண்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவர் குழுக்கள் தினமும் புதிய மாண வர்களை உதவிக்காக அடையா ளம் காண்பதும், அவர்களை பாது காப்பாக அழைத்து வருவதும் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாண வர்களின் உயிர்ச் சிக்கல்களை தவிர்க்கவும், அவர்களின் பாது காப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படுகின்றன. எஸ்எப்ஐ-யின் முழுமையான நம்பிக்கை “எல்லைப் பகுதிகளில் சிக்கி யுள்ள மாணவர்களுடன் எஸ்எப்ஐ துணைநிலையாகவும் உறுதியான ஆதரவாகவும் நிற்கிறது. மாணவர் சமுதாயத்தின் நலனுக்காக எஸ்எப்ஐ எந்த ஒரு நடவடிக்கை யையும் எடுக்க தயங்காது. அனை த்து வகையான உதவியும் வழங்க எங்களால் இயன்ற அனைத்தை யும் செய்ய நாங்கள் உறுதிய ளிக்கிறோம்” என தில்லி மாநில எஸ்எப்ஐ தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மீட்பு பணியை நள்ளிரவு 2 மணி வரை கண்காணித்த பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
இங்கு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி. அவர்... இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நேரம் நள்ளிரவு 2 மணி ஆகும். எஸ்எப்ஐ ஹெல்ப்லைன் மூலம் காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பிலிருந்து பாதுகாப்பாக அழை த்து வரும் மாணவர்கள் அனைவரும் ஹெச்.கே.எஸ்.சுர்ஜித் பவன் வரும் வரை எம்.ஏ.பேபி அங்கேயே காத்திருந்தார். அனைவருக் கும் உணவு / தூங்கும் உதவிகள் செய்து முடித்த பின்னர் தான் அவர் கிளம்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.