மசூதியைச் சுற்றியுள்ள கட்டங்கள் நள்ளிரவில் புல்டோசர்கள் மூலம் இடிப்பு பாஜக நிர்வாகம்
அட்டூழியம் பழைய தில்லியின் துர்க்மான் கேட் (Turkman Gate) பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதியைச் சுற்றியுள்ள கட்டடங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தில்லி மாநகராட்சி நள்ளி ரவில் இடித்து தள்ளியுள்ளது. ஃபைஸ்-இ-இலாஹி மசூதி சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. 1940-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி மசூதிக்கு 0.195 ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளது. அதற்கு அப்பாற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு என்றும், மசூதி நிலத்தை திருமண மண்டபமாகவோ அல்லது கிளி னிக் ஆகவோ பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றும் மாநகராட்சி தெரி வித்து வந்தது. அது மட்டுமின்றி இந்த மசூதி வளாகத்தில் சுமார் 30,000 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது எனவும் கூறியது. இது தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்திலும் உள்ளது. உயர்நீதி மன்றத்தில் மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அதாவது செவ் வாய்க்கிழமை நள்ளிரவில் 17 புல்டோ சர்கள் மூலமாக இடித்துத் தள்ளியுள்ளது பாஜக தலைமையிலான தில்லி மாநக ராட்சி. நீதிமன்ற உத்தரவு இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பே, நள்ளிரவில் இவ்வளவு அவசர மாக இடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று மசூதி தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு தொடர்ந்து முஸ்லிம்கள் உள்ளிட்ட மதசிறுபான்மையினர், தலித், பழங்குடி மக்களின் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன் அவர்களின் பொருளாதா ரத்தையும் திட்டமிட்டு சிதைத்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாகவே அவர்கள் ஆளும் மாநிலங்களில் தண்டனை என்ற பெயரில் பாஜக அரசு இடித்துத் தள்ளி வரு கிறது.