சண்டிகர் 2025ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழநாட்டைச் சேர்ந்த 4 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வெள்ளியன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டின் கொடைக் கானல் அன்னை தெரசா பல்கலைக்கழ கமும், பீகார் மாநிலம் தர்பங்கா பல்கலைக்கழகமும் மோதின. தர்பங்கா பல்கலைக்கழக வீராங்கனைகள் பவுல் அட்டாக் நடத்தி யதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு வீராங்கனைகள் மேல்முறை யீடு செய்துள்ளனர். பவுல் எல்லாம் இல்லை சரியானது தான் என தர்பங்கா பல்கலைக்கழக அணியும் போட்டியை நடத்தும் நிர்வாகமும் தமிழ்நாடு வீராங் கனைகளுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு வீராங்கனை மீது எதிரணி பயிற்சியா ளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதை தமிழ்நாடு வீராங்கனைகள் தட்டிக் கேட்க, அவர்கள் மீது சேர்களை தூக்கி எறிந்து, ஒட்டுமொத்த தமிழ்நாடு வீராங்கனைகள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளனர். மேலும் மேல்முறையீடு செய்த பல்கலைக்கழக பயிற்சியாளர் பாண்டி மீதும் தாக்குதல் நடத்தி, அவ ரை கைது செய்துள்ளது பஞ்சாப் காவல்துறை. தமிழ்நாடு கபடி வீராங் கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைர லாகி வருகிறது.
வீராங்கனைக்கு பலத்த காயம்?
காயம்பட்ட தமிழ்நாடு வீராங்கனை கள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள தோடு, பின்னணியில் சம்பவம் பற்றி வீடியோவை வெளியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் விளக்கி உள்ளார். அதில், “பஞ்சாப்பில் நடை பெற்ற தேசிய அளவிலான பல்கலைக் கழக கபடி போட்டியில் கொடைக் கானல், தர்பங்கா அணிகள் விளை யாடின. இதில் பாயிண்ட் கேட்கப் போன நம் வீராங்கனைகளை அடித்து விட்டனர். இதனால் பல வீராங்கனை களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தட்டிக் கேட்க போன பிற தமிழ்நாடு வீராங் கனைகளையும் அடித்துவிட்டனர். பெண் பிள்ளைகள் என்று கூட பாராமல் சேரை எடுத்து அடிக்கின்ற னர். கேட்கப்போன எங்களையும், பயிற்சி யாளர்களையும் தள்ளிவிடுகின்றனர். இதற்கு என்ன முடிவு என்று தெரிய வில்லை. ஒரு வீராங்கனையால் நடக்கக் கூட முடியவில்லை’’ என வருத்தத்து டன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு விளக்கம் இதையடுத்து பஞ்சாப்பில் உள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் பாதுகாப் பாக உள்ளனரா என கேள்விகள் கிளம்பியது. இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் செயலாளர் மேக்நாத் ரெட்டி அளித்த விளக்கத்தில்,”பஞ்சாப்பில் தமிழ்நாடு வீராங்கனைகள் பாது காப்பாக உள்ளனர். இது தொடர்பாகப் பஞ்சாப்பில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசினேன். பயிற்சியாளர் விசாரணைக்காகவே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். தமிழ்நாடு கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறி யுள்ளார். தில்லி தமிழ்நாடு இல்லம் செல்கின்றனர் பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திர மாக தில்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெள்ளிக் கிழமை அன்று மாலை செய்திகள் வெளி யாகின. தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு சனிக்கிழமை ரயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர்.