states

img

பசு கடத்தல் எனக் கூறி உ.பி.,யில் மீண்டும்  ஒரு என்கவுண்டர்

பசு கடத்தல் எனக் கூறி உ.பி.,யில் மீண்டும்  ஒரு என்கவுண்டர்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே கல்காலியன் ஆற்றின் கரை யில் ஏப்ரல் 11 அன்று அதிகாலை முகமது வாசிம் என்ற முஸ்லிம் இளைஞரை, அம் மாநில காவல்துறையினர் துப்பாக்கி யால் சுட்டுப் பிடித்தனர். பசுவை கடத்தி யதால் இந்த என்கவுண்டர் நிகழ்த்தப்பட்ட தாக உத்தரப்பிரதேச காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த சம்பவத்தில் முகமது வாசிம் படுகாயத்துடன் ஆபத் தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் அருகே கட்டௌலி பகுதியில் பசு கடத்தல் காரர் எனக் கூறி, இம்ரான் என்ற முஸ்லிம் இளைஞரை அம்மாநில காவல்துறை யினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து, கைது செய்துள்ளனர்.  2 உயிருள்ள பசுக்களையும், 9 இறந்த கால்நடைகளையும் ஏற்றிச் சென்ற  லாரியை பறிமுதல் செய்த போது, லாரி ஓட்டுனரான இம்ரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக என்கவுண்டர் தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் லாரி ஓட்டுன ரான இம்ரான் பசுவை கடத்தவில்லை, தன்னிடம் துப்பாக்கி இல்லை என கூறியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.