states

img

மக்களை துரத்தியவரை மாநகராட்சி ஆணையராக நியமித்த அமித் ஷா

மக்களை துரத்தியவரை மாநகராட்சி ஆணையராக நியமித்த அமித் ஷா

தில்லியில் உள்ள தியாகராஜ் மைதானம் விளையாட்டு மற்றும் நடைப் பயிற்சிக்கு மிக முக்கி யமானதாக உள்ளது. தில்லியில் நிலவும் வெப்பம் மற்றும் குளிர் நேரத்தை கருத்தில் கொண்டு விளையாட்டு வீரர் கள் மற்றும்நடைப் பயிற்சி செல்லும் பொதுமக்கள் வழக்க மாக இரவு 7 அல்லது 8 மணி வரை மைதானத்தைப் பயன்படுத்துவார்கள். ஆனால் 2022இல்,1994ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சீவ் கிர்வார், தனது மனைவியும் ஐஏஎஸ் அதி காரியுமான ரிங்கு துக்காவுடன் சேர்ந்து, மைதான ஓடுதளத்தில் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களை வெளியேற்றினார். இது பெரும் சர்ச்சையானது. விளையாட்டு வீரர்கள், பொதுமக்களுடன் அப்போதைய தில்லி ஆம் ஆத்மி அரசு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் அமித் ஷாவின் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சஞ்சீவ் கிர்வார் தில்லியில் இருந்து லடாக் பகுதிக்கும், அவரது மனைவி ரிங்கு துக்கா அருணாச்சலப் பிரதேசத்திற்கும் உடனடியாக இடமாற்றம் செய்தது. இந்நிலையில், பாஜக ஆட்சி அமைந்தவுடன் லடாக்கில் பணியாற்றி வந்த சஞ்சீவ் கிர்வார் தற்போது மீண்டும் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு, தில்லி மாநகராட்சி ஆணையராக நிய மிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறி விப்பை அமித் ஷா அமைச்சகம் வெளி யிட்டுள்ளது. தில்லி மாநகராட்சி ஆணை யராக இருந்த அஸ்வினி குமார், தற்போது ஜம்மு-காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.