states

மோடி முன்னிலையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் அம்பானி, அதானி

மோடி முன்னிலையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் அம்பானி, அதானி

பாஜக ஆளும் அசாம் தலைநகர் கவுகாத்தியில் “அசாம் உள் கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு” நடைபெற்று வருகிறது. பிரத மர் மோடி இந்த மாநாட்டை செவ்வாய்க் கிழமை அன்று தொடக்கி வைத்தார்.  இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்க ளான தொழிலதிபர்கள் முகேஷ் அம்பா னியும், கவுதம் அதானியும், அசாமில் தங்கள் இரு குழுமங்களும் தனித் தனியே ரூ.50,000 கோடி முதலீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அசாமில் 5 வெவ்வேறு துறைகளில் முதலீடு செய் யப்போவதாக ரிலையன்ஸ் தொழில் நிறு வனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அதே போல அசாம் மாநிலத்தில் விமான நிலையம், சிமெண்ட் தொழிற்சாலை, எரிவாயு, மின்சார திட்டங் கள் உள்பட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ. 50,000 கோடி முதலீடு செய்யப் போவதாக தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.