states

img

உலோகத் துறையிலும் காலடி வைக்கும் அதானி

மோடி பிரதமர் ஆவ தற்கு முன் அவ ரது நெருங்கிய நண்பரான கவுதம் அதானி உல கப் பணக்காரர்கள் பட்டியலில் 600ஆவது இடத்திற்கு மேல் இருந்தார். 2014ஆம் ஆண்டிற்கு பிறகு துறைமுகம், விமான நிலை யம், மின்சார உற்பத்தி, சுரங்கம், சிமெண்ட், இயற்கை எரிவாயு, உணவுத்துறை, ஆயுதங்கள் தயாரிப்பு, ஊடகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை பிரதமர் மோடி நண்பர் அதானிக்கு தாரை வார்த்தார்.  இதன்மூலம் உலகப் பணக்கா ரர்கள் பட்டியலில் ரூ.12 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டிய லில் டாப் 3 வரை (2022 செப்டம் பர்) முன்னேறினார். ஹிண்டன் பர்க் அறிக்கையைப் போல பல் வேறு முறைகேடு குற்றச்சாட்டு வந்தாலும், மோடி அரசின் ஆதர வால் சின்னஞ்சிறிய சரிவுகளுடன் அதானி வழக்கம் போல நன்றாக கல்லா கட்டி வருகிறார். இந்நிலையில், அதானி உலோ கத் துறையிலும் காலடி வைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோடி அரசின் முழு ஒத்துழைப்பால் ரூ.42,000 கோடி (5 பில்லியன் டாலர்) முத லீட்டில் உலோக வணிகத்திலும் கள மிறங்க உள்ளார்.  நாட்டில் தற்போது அனில் அகர்வாலின் வேதாந்தா, ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா குழுமம்,  ஜேஎஸ்ட பிள்யு (JSW) போன்ற முன்னணி நிறுவனங்கள் உலோகத் துறை யில் வலுவான நிலையில் வணிகம் செய்து வருகின்றன. இதுதொடர் பாக அதானி நிறுவனத்தில் பணி புரியும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதானி குழுமத்தின் இயற்கை வளப்பிரிவு ரூ.42,000 கோடி முத லீட்டுடன் மூன்று முதல் ஐந்து  ஆண்டுகளில் சுரங்கம், சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி மூலம் தாமிரம், இரும்பு மற்றும் எஃகு, அலுமினி யம் ஆகியவற்றை தயாரிக்க திட்ட மிட்டுள்ளது. ரூ.42,000 கோடிகளில் ரூ.16,000 கோடியில் (2 பில்லியன் டாலர்) தாமிரம் தயாரிப்புக்கும், மீதமுள்ளவை மற்ற உலோகங்க ளுக்காக செலவிட திட்டம் வகுக்கப் பட்டுள்ளது” என அவர் கூறினார்.

உலோகத்துறை நிறுவனங்களை வளைக்க திட்டமா?

சோலார் பேனல்கள், காற் றாலை டர்பைன்கள் போன்ற பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு உலோகங்கள் முக்கியமானது ஆகும். மின்சக்தி மற்றும் போக்கு வரத்து பிரிவுகளுக்கு உலோகங்க ளின் தேவைக்காகவே உலோகத் துறையில் அதானி குழுமம் காலடி வைக்கிறது என செய்திகள் வெளி யாகியுள்ளன. ஆனால் அதானி நிறு வனத்தின் திட்டம் வேறு ஆகும்.  நாட்டின் பெரிய உலோக வணிக நிறுவனங்களான வேதாந்தா அலு மினியம், துத்தநாகம், வெள்ளி, இரும்பு மற்றும் எஃகு, நிக்கல் போன்றவைகளையும், டாடா  குழுமம் இரும்பு, எஃகு போன்ற வற்றையும், ஆதித்யா பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் தாமிரம், அலுமினியத்தையும், ஜேஎஸ்ட பிள்யு (JSW) நிறுவனம் எஃகு  போன்றவைகளையும் தயாரித்து உலோகத்துறையில் நல்ல நிலை யில் வருமானம் ஈட்டி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு போட்டி யாக அதானி குழுமம் கள மிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகினாலும்,  சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களை வாங்கி யதைப் போலவே உலோகத்துறை நிறுவனங்களை வளைக்கவே அதானி உலோகத்துறையில் காலடி வைக்கிறார்.  கடந்த 2022இல் சிமெண்ட் உற்பத்தியில் கொடி கட்டிப் பறந்த அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் நிறுவனங்க ளை ரூ.55,000 கோடிக்கு (6.6 பில்லியன் டாலர்) வாங்கியதைப் போல வேதாந்தா, ஹிண்டால்கோ, டாடா, ஜேஎஸ்டபிள்யு என நிறு வனங்களை வாங்கி இந்தியாவின் உலோகத்துறையை தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்து கல்லா கட்டவே அதானி இந்த துறையில் தடம் பதிக்க உள்ளார் எனத் தெரிகிறது.