பாஜக ஆளும் ராஜஸ்தானில் கொடூரம் 13 வயது சிறுமி பாலியல் வன்கொலை?
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லம் பிகானேர் அருகே ரஞ்சீத்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சனியன்று காலை 11:30 அளவில் பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்றார். ஆனால் 12:30 மணி ஆகியும் சிறுமியை காணவில்லை. ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமியை பெற்றோரும், உள்ளூர் மக்களும் தேடியுள்ளனர். பள்ளி யிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலை வில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகி லுள்ள வனப் பகுதியில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் அரை நிர்வாண நிலையிலும், காயங்களுடனும் காணப்பட்டதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி சனியன்று மாலை முதல் பெற்றோர் பொதுமக்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை வரை போராட்டம் நீடித்தது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு, உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் போரா ட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த சம்ப வம் தொடர்பாக பிஎன்எஸ் பிரிவு 103 (கொலை) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பாலியல் வன்கொடுமை நடந் ததா? என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.