ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
ராஜஸ்தானில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பேர வையில் கேள்வி நேரத்தின் போது சமூக நீதித் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட்,”கடந்த 2023 -24 பட்ஜெட்டில் கூட நீங்கள் (காங்கிரஸ்) வழக்கம் போல் உங்கள் பாட்டி இந்திரா காந்தியின் பெயரையே அனைத்து திட்டங்களுக்கும் சூட்டினீர்கள்” எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சனிக் கிழமை அன்று 3 முறை அவை ஒத்திவைக் கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்எல் ஏக்களை இடைநீக்கம் செய்ய சபா நாயகர் வாசுதேவ் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்திரா காந்திக்கு எதி ராக அவதூறு கருத்தை திரும்பப் பெற வேண்டும் மற்றும் 6 எம்எல்ஏக்கள் இடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல் ஏக்கள் தொடர்ந்து 3ஆவது நாளாக சட்ட மன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.