பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்ப மேளா கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரி ழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம டைந்தனர். இதையடுத்து கும்பமேளா போன்ற திரு விழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “உத்தரப்பிரதேச மாநில நிர்வாகத்தின் தவறு கள், அலட்சியம் மற்றும் நிர்வாகத்தின் முழுமை யான தோல்வி காரணமாக கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள் ளனர். அதனால் திருவிழாக்களில் நெரிசலை கட்டுப்படுத்தவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அதே போல கும்பமேளாவில் விஐபி- க்களால் சாதாரண பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள் ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்ணா வாய்மொழியாக வெளியிட்ட உத்தரவில், “மனுதாரர்-வழக்கறிஞர் விஷால் திவாரி இந்த பொதுநல வழக்கை முன்கூட்டியே பட்டியலிடக் கோருவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, பதிவுத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக விண் ணப்பிக்க வேண்டும்” என கூறினார்.
உ.பி., பாஜக அரசு நீதி விசாரணைக் குழு அமைப்பு
கும்பமேளா விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த நீதிபதி ஹர்ஸ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உத்தர விட்டுள்ளார். மேலும் விபத்து குறித்த காரணம் கண்டறிய 2 தனிப்படைகளை உத்தரப்பிரதேச காவல்துறை அமைத்துள்ளது. இதற்கிடையே கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என முதல்வர் ஆதித்ய நாத் அறிவித்துள்ளார்.