அலகாபாத், பிப்., 02- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தின் அலகாபாத் (பிரக்யா ராஜ்) அருகே திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாப்படும் கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26ஆம் தேதி வரை என மொத்தம் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கும்பமேளா நிகழ்வுக்காக பல நூறு கோடி மதிப்பில் பிரம்மாண்ட திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத் பெருமை யாக கூறினார். ஆனால் கும்பமேளாவில் பங்கேற்கும் மக்கள் கடும் சிரமத்துடன் தான் திரிவேணி சங்கமத்தில் நீராடி வரு கின்றனர். கடந்த வாரம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்பதால் கும்பமேளா கூட்ட நெரிசல் இறப்பு இன்னும் முழுமையாக வெளியிட அம்மாநில பாஜக அரசு மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில் கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பும் மக்கள் கடும் சித்ரவதையுடன் தான் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் அலகாபாத் சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 30 மணி நேரத்துக்கும் மேலாக பல கி.மீ தொலை வுக்கு நீடித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக வெளியில் வர முடியாமல் உணவு, தண்ணீர் இன்றி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குழந்தை கள் மற்றும் முதியவர்களுக்காக மக்கள் அவ சர உதவியும் கேட்டனர். ஆனால் அலகா பாத் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை கண்டுகொள்ள வில்லை.