states

img

கோவாவில் கோர விபத்து சுற்றுலா விடுதியில் சிலிண்டர் வெடித்து 25 பேர் பலி

கோவாவில் கோர விபத்து சுற்றுலா விடுதியில் சிலிண்டர் வெடித்து 25 பேர் பலி

பனாஜி சுற்றுலாத் துறையை நம்பி யுள்ள கோவா மாநிலத்தில்  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிர மோத் சாவந்த் உள்ளார். இம்மாநி லத்தில் பிரமோத் சாவந்த் முதல மைச்சராக பொறுப்பேற்றப் பின்பு  விதிகளின் படி இல்லாமல், விதிமீற லாக சுற்றுலா விடுதிகளுக்கு அனு மதி வழங்கப்பட்டு வருவதாக குற்  றச்சாட்டு எழுந்தது. பாஜகவினர் நன்கொடை பெற்று விடுதிகளுக்கு  அனுமதி வாங்கி தருவதால் கோவா  அரசு அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கா மல் கடுமையாக திணறி வருகின்ற னர். இத்தகைய சூழலில், விதிமீறலு டன் செயல்பட்டு வந்ததாக கூறப் படும், கோவாவின் அர்போரா பகுதி யில் உள்ள “பிர்ச் பை ரோமியோ  லேன்” சுற்றுலா விடுதியில், சனி யன்று நள்ளிரவு 12 மணியளவில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்  பட்டது. விடுதியில் 40க்கும் மேற் பட்டோர் இருந்தனர். சிலிண்டர் வெடிப்பின் தீவிரம் மிகவும் கடு மையானது என்பதால், அனைத்து அறைகளுக்கும் தீ வேகமாக பரவி யது.  தகவலறிந்த காவல் மற்றும் தீய ணைப்புத் துறையினர் மீட்புப் பணி யில் ஈடுபட்டனர். ஞாயிறன்று மாலை நிலவரப்படி தீ விபத்தில்  மற்றும் மூச்சுத் திணறிய நிலை யில் உயிரிழந்த 25 உடல்கள் மீட்கப்  பட்டன. இறந்தவர்களில் 12 ஊழி யர்கள் மற்றும் 4 சுற்றுலாப் பயணி கள் அடங்குவர். மற்ற 9 பேரின்  அடையாளம் இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை. இதில் 7 பேர் தீ  விபத்தில் இறந்தனர். மீதமுள்ள வர்கள் மூச்சுத் திணறல் காரணமாக  இறந்தனர் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் செய்தி கள் வெளியகியுள்ளன. டிஜிபி எச்சரிக்கை தீ விபத்து தொடர்பாக கோவா  காவல்துறை இயக்குநர் (டிஜிபி)  அலோக் குமார் கூறுகையில், “தீ விபத்து நிகழ்ந்த சுற்றுலா விடுதி யில் இருந்து 25 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலோர் கிளப் ஊழியர்கள்  ஆவர். தரை தளத்தில் உள்ள சமை யலறையில் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பர வியது. சிலிண்டர் வெடிப்பு எனக்  கூறப்பட்டாலும், தீ விபத்துக்கான மூல காரணம் குறித்து தடயவியல்  அறிவியல் (எப்எஸ்எல்) குழுவும்  விசாரித்து வருகிறது. தீ பாதுகாப்பு  விதிகள் பின்பற்றப்பட்டதா இல் லையா? என்பது விசாரணையில் தீர்மானிக்கப்படும். சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார். நிவாரணம் கோவா தீ விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு குடியரசுத் தலைவர் திர வுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங் கல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.