states

img

தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து  10 பேர் உயிரிழப்பு

தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து  10 பேர் உயிரிழப்பு

தில்லி முஸ்தபாபாத் பகுதியில் 4 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று சனிக் கிழமை அன்று  அதிகாலை 3 மணியள வில் திடீரென இடிந்து விழுந்தது. இடி பாடுகளில் மொத்தம் 22க்கும் அதிக மானோர் சிக்கிக் கொண்டனர். அவர்க ளில் 10 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள  4 முதல் 6 பேர் வரை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருவ தாக தில்லி வடகிழக்கு மாவட்ட கூடுதல் டிசிபி சந்தீப் லம்பா கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் தில்லி காவல் துறை அடங்கிய குழுவினர் சம்பவப் பகு திக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லி தீயணைப்பு துறையி னரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.