states

img

‘நான் கடவுளுடன் பேசுவேன்’

‘நான் கடவுளுடன் பேசுவேன்’

பாஜக எம்எல்ஏ காமெடி

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மோவ் தொகுதி யின் ஹசல்புர் கிராமத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் மாநில அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான உஷா தாக்குர் பேசுகையில்,”வாக்களிக்கும் போது ஒருபோதும் நேர்மையை இழக்காதீர்கள். கடவுள் மேலே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பணம், சேலை, கண்ணாடி மற்றும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த பிறவியில் ஒட்டகம், ஆடு, செம்மறியாடு, நாய் மற்றும் பூனையாக பிறப்பீர்கள். தங்களின் ஜனநாயக கடமையை விற்பனை செய்பவர்கள் இவைகளாகத்தான் பிறப்பார்கள். நான் கடவுளுடன் நேரடியாக பேசுவேன். என்னை நம்புங்கள்” என அவர் கூறியுள்ளார்.