states

img

ஆந்திராவில் கொரோனா வார்டாக மாறிய கோயில் மண்டபங்கள்.... ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஏற்பாடு

விஜயவாடா:
ஆந்திராவில் கொரோனா 2-வது அலைவேகமெடுக்க தொடங்கியுள்ளது. தினசரி இறப்புஎண்ணிக்கையும் 100-ஐத் தாண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க வசதியாக ஆந்திராவில் உள்ளகோவில் மண்டபங்களை கொரோனா வார்டுகளாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய் துள்ளது.திருமலை திருப்பதி கோவில், விஜயவாடாவில் உள்ள துர்கா தேவி கோவில், மேற்குகோதாவரியில் உள்ள துவாரகா திருமலா கோவில் உள்ளிட்ட16 கோவில்களின் மண்டபங்களில் 1000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளன.வெண்டிலேட்டர் தேவைப்படாத சிறிய மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மட்டும் இந்த கோயில் மண்டபங்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.