60 ஆண்டுகளுக்கு பிறகு அபாய அளவை தாண்டி பாயும் யமுனை நதி
நாட்டில் பருவமழை தீவிரமடைந்து வரு கிறது. தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில் இடைவிடாமல் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் வெள்ளத்தில் சிக்கி இயல்பு நிலையை இழந்தன. இதனை தொடர்ந்து தேசிய தலைநகர் தில்லியும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. தில்லியில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சி யாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. குறிப்பாக 60 ஆண்டு களுக்கு பிறகு யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டி 207.4 மீட்டராக அதிகரித்துள்ளது. இதனால் தில்லியின் யமுனை கரையோர மாவட்டங்கள், என்சிஆர் மற்றும் சுற்றுச் சாலை, சிவில் லைன்ஸ், பேலா சாலை, சோனியா விஹார், யமுனா பஜார், அக்சர்தாம் உள்ளிட்ட வடக்கு தில்லி பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
கழுத்து அளவுக்கு வெள்ளம்
யமுனை கரையோரம் வசிக்கும் 12,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல சுற்றுச்சாலை, சிவில் லைன்ஸ் பகுதி களில் 4 அடிக்கு உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கி யுள்ளது. தில்லி பாஜக அரசு போதிய உதவி மேற்கொள்ளாததால் மக்கள் மொட்டைமாடிக ளில் தஞ்சம் புகுந்தும் மற்றும் சுற்றுச்சுவர்கள் மீது நடந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.
2 லட்சம் பேர் பாதிப்பு
கனமழையால் வடக்கு தில்லி, என்சிஆர் பகுதிகளில் வாழும் மக்கள் தண்ணீர், உண வின்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தில்லி காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கும் அதிகமா னோர் வீடுகளை விட்டு வெளியேறி இயல்பு நிலையை இழந்துள்ளனர்.
அழுகும் நிலையில் சடலங்கள்
தில்லி பகுதியின் முக்கிய தகன மேடை யாக இருப்பது நிகம்போத் காட் ஆகும். இந்த பகுதியில் வெள்ள நீர் 3 அடிக்கு மேல் தேங்கி யுள்ளது. தகன மேடை முற்றிலும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், அங்கு உடல் தகன வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் மற்றும் இயற்கையாகவும், விபத்திலும் உயிரிழந்த நபர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர். சில இடங்களில் மின்சாரம் இல்லாததால் குளிர்சாதன வசதி இல்லாமல் சடலங்கள் அழுகும் நிலையில் இருப்பதாவும், நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கனமழை தொடரும் தில்லி பகுதி ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இத்தகைய சூழலில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “செப் 5 அன்று மிதமான அளவில் கனமழை யும், செப் 6 அன்று இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யும்” என அதில் கூறப்பட்டுள் ளது. இதனால் தில்லி மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
தில்லி என்சிஆர் என்றால் என்ன?
தில்லி என்சிஆர் என்பது தேசிய தலைநகர் மண்டலம் ஆகும். இந்த என்சிஆர் என்பது தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹரியானா, உத்த ரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்க ளிலிருந்து பல மாவட்டங்களை உள்ளடக்கி யது . தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம் (NCRPB) 1985ஆம் ஆண்டில் பிராந்தியத்தின் வளர்ச்சியைத் திட்டமிட வும், பிராந்தியத்தில் நிலப் பயன்பாடுக ளைக் கட்டுப்படுத்துவதற்கும் உள்கட்ட மைப்பு மேம்பாட்டிற்கும் இணக்கமான கொள்கைகளை உருவாக்கவும் உருவாக் கப்பட்டது. அதன்படி காசியாபாத், நொய்டா (உத்தரப்பிரதேசம்), பரிதாபாத், குர்கான் (ஹரியானா), பரத்பூர் (ராஜஸ் தான்) உள்ளிட்ட தில்லி மற்றும் அண்டை மாநில பகுதிகள் தில்லி என்சிஆர் என அழைக்கப்படுகின்றன.