states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் என்ற ஒரு சிறிய குழு இருக்கிறது. அது விரைவில் மறைந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். ஆனால், அவர் ஏன் தொடர்ந்து பிரிக்ஸ்-ஐ அச்சுறுத்துகிறார்? உண்மை என்னவென்றால், டிரம்ப் பயப்படுகிறார். இதுதான் காரணம்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூட இன்னும் 2 நாட்களே உள்ளது. டிரம்ப் ஏவுகணை 24ஆவது முறையாக ஏவப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்க இருந்த அணு ஆயுதப் போரை தடுத்து நிறுத்தியதாக டொனால்டு டிரம்ப் கூறி இருக்கிறார். 

ஊடகங்களில் தப்லிகி ஜமாத் மாநாட்டால் கொரோனா தொற்று பரப்பப்பட்டதாக பதியப்பட்ட 16 வழக்குகளை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. பொய்யான இத்தகைய செய்திகளை கொண்டு சமூகத்திலும் பொருளாதார ரீதியாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு அச்சமயத்தில் கட்டமைக்கப்பட்டது. இஸ்லாமியர் தனிமைப்படுத்தப்பட்டதில் வடஇந்திய ஊடகங்கள் பெரும்பங்காற்றியது அம்பலமாகியுள்ளது.

கொரோனாவை பரப்புவதாகக் கூறி, தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மீது ஒன்றிய அரசு பதிவு செய்த வழக்குகளை, தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அச்சமயத்தில் “கொரோனா ஜிகாத்” என்றெல்லாம் பேசியவர்களும், எழுதியவர்களும் இப்போது மன்னிப்புக் கேட்பார்களா என்பதுதான். 

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, நீதிபதி விபு பக்ரு சனிக்கிழமை அன்று பதவி யேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத் தார். 59 வயது நீதிபதியான விபு பக்ரு இதற்கு முன்ன தாக, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி யாற்றினார். 

பஞ்சாப் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியின் எம்எல்ஏ அன்மோல் ககன் மான் (கரார் சட்டமன்ற தொகுதி) தனது பதவியை ராஜினாமா செய்தார்.