states

img

நான் ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்பதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது

நான் ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்பதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார் பதிலடி

மும்பை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் நூற் றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த நூற்றாண்டு விழாவிற்கு சாதி, மதம், பாகுபாடின்றி அழைப்பி தழ்கள் வழங்கப்பட்டு வருவதாக ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. ஆனால் இந்த அழைப்பிதழ் மூலம் ஆர்எஸ்எஸ் - பாஜக எதிர்க்கட்சி களின் “இந்தியா” கூட்டணிக்குள் விரிசல் மற்றும் நாட்டின் நீதிபதி கள் மீது அவதூறை கிளப்பி வருகின்றன. 4 நாட்களுக்கு முன்பு தானாக அழைப்பிதழ் கொடுத்து மகா ராஷ்டிரா காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது ஆர்எஸ்எஸ். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏ நிதின் ராவத்,“நான் அம் ம்பேத்கரின் கொள்கையை மட்டுமே மதிக்கிறேன். அதனால் ஆர்எஸ்எஸ் விழாவில் நான் கலந்து கொண்டால் அது அவ ருக்கு அவமதிப்பாக இருக்கும். ஆர்எஸ்எஸ் கொள்கையை ஒரு போதும் ஏற்க மாட்டேன்” என செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கினார். இதற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் பாராட்டுத் தெரிவித்தன. தொ டர்ந்து ஆர்எஸ்எஸ் அழைப்பிதழ் சதி திட்டத்தை சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகளும் முறியடித்தன. பி.ஆர்.கவாயின் தாயார் பதிலடி இந்நிலையில், ஆர்எஸ்எஸ் விழாவின் மூலம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தொடர்பாக அவதூறு பரப்ப ஆர்எஸ்எஸ் - பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சி யாக, மகாராஷ்டிரா மாநிலம் அம ராவதியின் கிரண் நகர் பகுதியில்  உள்ள ஸ்ரீமதி நர்சம்மா மகாவித்யா லயா மைதானத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி விழா ஒன்று நடைபெறு கிறது. ஆர்எஸ்எஸ் சார்பில் நடை பெறும் இந்த விழாவிற்கு தலைமை  விருந்தினராக பங்கேற்க உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார் கமல்தாயிக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்தது. வழக்கம் போல பாஜக ஐடி விங் மற்றும் கோடி மீடியா ஊடகங் கள்,“உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார் கமல்தாய் ஆர்எஸ்எஸ் நிகழ்வில் கலந்து கொள்வார்” என செய்தி வெளியிட்டு புகைச்சலை ஏற்படுத்தின. ஆர்எஸ்எஸ்ஸின் சதி இந்நிலையில், தாதாசாகேப் கவாய் அறக்கட்டளையின் நிறுவ னரும், தலைவருமான கமல்தாய்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்பதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது. குறிப்பாக இது ஆர்எஸ்எஸ்ஸின் சதி ஆகும். நான் ஆர்எஸ்எஸ் அழைப்பை ஏற்கவில்லை. நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள எழுத்துப் பூர்வ ஒப்புதலும் அளிக்கவில்லை. அதனால் அமராவதியில் நடை பெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்வில் நான் கலந்து கொள்ள மாட்டேன். எனது குடும்பம் அம்பேத்கரிய சிந்தனை மற்றும் இந்திய அரசியலமைப்பின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டது. இது போன்ற ஒரு நிகழ்வோடு என்னை தொடர்புபடுத்துவது தவறானது ஆகும். விஜயதசமி பண்டிகை பல ருக்கு கலாச்சார முக்கியத்து வத்தைக் கொண்டிருக்கலாம். பொதுமக்களும், அம்பேத்கரிய ஆதரவாளர்களும் இதுபோன்ற தவறான பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். அரசியலமைப்பு விழு மியங்களுக்கான தனது உறு திப்பாட்டை நம்ப வேண்டும்” என அவர்  வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இந்த கடிதத்தை கமல்தாய் எழுதவில்லை என “கோடி மீடியா” ஊடகங்கள் செய்தி வெளியிட்டு திசை திருப்பும் முயற்சி யை மேற்கொண்டு வருகின்றன.