states

img

சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்க

சோனம் வாங்சுக்கை உடனடியாக  விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்க

உச்சநீதிமன்றத்தில் அவரது மனைவி முறையீடு

புதுதில்லி கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனி யன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6ஆவது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்ற னர். ஆனால் இந்த கோரிக்கை யை மோடி அரசு கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், இக்கோரிக் கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் சமீபத்தில் உண் ணாவிரதம் இருந்த போது லடாக்கின் லே நகரில் வன் முறை வெடித்தது. கடந்த செப்., 24 அன்று நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 100க் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 50க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போராட்டத்தை தூண்டி யதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்., 26 அன்று கைது செய் யப்பட்டு, ஜோத்பூர் சிறையில் (ராஜஸ்தான்) அடைக்கப்பட் டார். இத்தகைய சூழலில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவ ரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான ஆட்கொணர்வு மனுவில்,“சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்க நடவடிக் கை எடுக்க வேண்டும். அவரது தடுப்புக்காவல் “சட்டவிரோதமா னது”. செப்டம்பர் 26 அன்று வாங்சுக் கைது செய்யப்பட்டதிலிருந்து தன்னால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. குறிப் பாக தடுப்புக்காவல் உத்தரவின் நகல் தனக்கு இன்னும் கிடைக்க வில்லை. இது நடைமுறை மீறல்” என அதில் கூறப்பட்டுள்ளது.