states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 1,000 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் பிடிபடவில்லை. ஆனால் மோடியோ நாட்டில் இருப்பதே இல்லை. அவர் சுற்றுலாத்துறைக்கான தூதராக இருக்கத்தான் லாயக்கு.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

மக்கள், தேநீர் தொடங்கி சுகாதார காப்பீடு வரை அனைத்திற்கும் ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள். அதேநேரத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றன. பாஜக ஆளாத மாநிலங்களைத் தண்டிக்க ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸ்மி

பாஜக மராத்தி பேசும் மற்றும் இந்தி பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்தி மொழி எதிர்ப்புக்காக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஒன்றாக இருக்கலாம். ஆனால் கூட்டணியாக மாற வேண்டும். இது நடந்தால் மகாராஷ்டிராவிற்கு நல்லது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது. அதாவது ஒரு முகமூடியாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது. பாஜக பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை திணிக்க விரும்புகிறது.